வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வாழும் இந்தியரான சீனிவாசன் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த நிலையில் உள்ள கொலம்பியா சர்கியூட் அப்பீல் கோர்ட்டிற்கு தலைமை நீதிபதி இடத்தை பிடித்திருப்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
இவரின் முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமைப்பட கூடிய விஷயம் ஆகும். இவர் அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக பணியாற்றி 2011ம் ஆண்டு முதல் முதன்மை துனண அட்டார்னி ஜெனரல் பதவி வரை தனது கடின உழைப்பின் மூலம் உயர்ந்தவர்.
ஒரு கட்டத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிசீலிக்கப்பட்டவர் என்பதுடன் தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்தவர் இப்பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்பது பெருமைப்பட கூடிய ஒன்றாக கருதப்படுகிறது.