அம்பேத்கரின் லண்டன் வீட்டை காக்க, மோடி செய்த மாஸ்டர் பிளான்!

அம்பேத்கரின் லண்டன் வீட்டை காக்க, மோடி செய்த மாஸ்டர் பிளான்!

Share it if you like it

லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை இடமாற்றம் செய்ய இருந்த அந்நாட்டின் அரசாங்க முடிவை, இந்திய வெளியுறவுத்துறை ராஜா தந்திர முறையில் செயல்பட்டு அவ்வீட்டை காப்பாற்றி அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது.

இந்திய மக்களால் அவ்வளவு எளிதில், யாரும் மறந்து விட முடியாத பெயருக்கு சொந்தக்காரர் டாக்டர் அம்பேத்கர். இந்திய மக்களின் நன்மைக்காக தன்னையே நெய்யாக உருக்கி, அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய, தலைச் சிறந்த இந்திய தலைவர்களில் இவரும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்திய விடுதலைக்குப் பின் நாட்டின், முதன் சட்ட அமைச்சராக திகழ்ந்தவர்., என்பதோடு மட்டுமில்லாது, உயர் கல்வி பெறுவதற்காக, அயல்நாடு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் உரியவர். மேலும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கே, பெருமை சேர்த்த  ’விருது’ இவர் என பலரும் , அன்புடன் அழைத்து வரும் நிலையில், அம்பேத்தகர் லண்டனில் வசித்த வீட்டை, மீண்டும் சட்ட போராட்டம் செய்து மீட்டு  வந்த மோடி அரசு!

1920-21-ல் உயர்கல்வியை லண்டனில் பயின்றார் அம்பேத்கர். அப்போது வடமேற்கு லண்டனில் உள்ள காம்டென் நகரில் கிங் ஹென்றி சாலையில் உள்ள 10-ம் எண் வீட்டில் தங்கி இருந்தார். இந்த வீட்டை அதன் உரிமையாளர் கடந்த 2015-ம் ஆண்டு விற்க முடிவு செய்தார். மோடி அறிவுரையின் பெயரில் அப்பொழுதைய, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்வினாஸ் அரசு, அந்த வீட்டை ரூ.30 கோடிக்கு வாங்கியது. அதன் பின்னர் அந்த வீட்டை அம்பேத்கரின், நினைவகமாகவும், அவ்விடத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள், என அருங்காட்சியகமாக மாற்றியது.

அம்பேத்கரின் லண்டன் இல்லத்தில் பிரதமர்

ஆனால் திட்ட அனுமதி சரியாக கடைபிடிக்கவில்லை என்று, நினைவகத்தை மூட காம்டென் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம், நினைவகத்துத்திற்கு முறைப்படி அனுமதி கோரியது. ஆனால்  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்திய தூதரகம் சார்பில், திட்டமிடல் இயக்குநரகத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அம்பேத்கரின் லண்டன் இல்லம்

லண்டனில் உள்ள இந்திய மக்கள் இந்த வீட்டை, தங்களின் ஒரு அங்கமாக பார்க்கிறார்கள் என்றும். பல்வேறு கருத்துக்களை முன் வைத்து தூதரகம் வாதிட்டது. ஆனால் உள்ளாட்சி நிர்வகாம் சார்பில் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த வீட்டை வேறு இடத்திற்கு மாற்ற, வேண்டும் என்று அவர்கள் தங்கள் கருத்தில் உறுதியாக இருந்தனர்.

அம்பேத்கரின் லண்டன் இல்லதில் பிரதமர் மற்றும் நிர்வாகிகள்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆய்வாளர், தனது பரிந்துரையை தங்கள் நாட்டு அரசிடம் சமர்ப்பித்தார். இதனை அடுத்து அம்பேத்கர் நினைவகம் அதே இடத்தில், செயல்பட பிரிட்டன் அரசு அனுமதி வழங்கி இருப்பதை அடுத்து பலரும் மோடி அரசின் மாஸ்டர் பிளானையும், அவரின் தீவிர முயற்சிக்கு கிடைத்த, வெற்றியையும் பலர் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it