Share it if you like it
- நகரத்தார் செட்டியார் சமூகத்தினர் அயோத்தியில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கும் ராமர் கோவிலுக்கு மரத்தால் செய்யப்பட்ட தேரை நன்கொடையாக அளிக்கும் என்று கூறினர். இதன்படி அவர்கள் நாகரதர் சமூகத்தின் பழைய தர்ம நெறிமுறைகளுக்கு ஏற்ப, அவர்கள் ஒரு மர தேரை உருவாக்கியுள்ளனர். ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த தேரானது கோவிலுக்கு வழங்கப்படும் என்றும் அன்று எங்கள் சமூகத்தினர் ராம நவமியை கொண்டாட போகிறார்கள் என்றும் நாகரத சமூகத்தின் தலைவர் மற்றும் வழக்கறினரான பழ.ராமசாமி கூறியுள்ளார்.
- மேலும் இந்த தேர் 18.5 உயரமும் 9 அடி அகலமும் 8 தூண்களைக் கொண்டது. கலை ரீதியாக தயாரிக்கப்பட்ட மர தேரில் 210 சிலைகளின் அமைப்புகள் உள்ளன. இந்த தேரை விருது பெற்ற சிற்பி ஏ.ஆர்.கே ஏகாம்பர ஆசாராய் மற்றும் அவரது குழுவினர் 66 நாட்களில் 45 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளனர். இந்த தேரில் ஹனுமன், மற்றும் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் ராமாயணத்தின் காட்சிகளும் தேரில் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
- எங்கள் சமூகம் மாநிலம் முழுவதும் 140 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம். மேலும் நாடு முழுவதும் சிங்கப்பூர்,மலேசியா,ஸ்ரீலங்கா,மியான்மர் போன்ற நாடுகளில் 1,000 கோயில்களைக் கட்டியுள்ளோம். இவ்வாறு நகரத்தார் சமூகத்தின் தலைவர் மற்றும் வழக்கறினரான பழ.ராமசாமி அவர்கள் கூறியுள்ளார்.
Share it if you like it