Share it if you like it
அரபிக் கடலில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் இந்திய கடற்படைகளும் சீனாவின் எதிரி நாடான ஜப்பான் கடற்படைகளும் கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டு வருவது சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜிமெக்ஸ் என்றழைக்கப்படும் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி கடந்த சனிக்கிழமை செப்., 26 துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
Share it if you like it