அருவருப்பும், வெறுப்பும் இல்லாமல் ஆத்மார்த்தமாக பணியாற்றும் பூமியின் தேவதைகள் செவிலியர்கள் !

அருவருப்பும், வெறுப்பும் இல்லாமல் ஆத்மார்த்தமாக பணியாற்றும் பூமியின் தேவதைகள் செவிலியர்கள் !

Share it if you like it

  • செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி. அவர்களின் சேவைகளை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12 செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • கொரோனா நோய் தொற்றினால் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தினால் தன் வீட்டையும் மறந்து மருத்துவமனையே தன் வீடாக கருதி தூக்கத்தை மறந்து இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் உன்னதமான தேவதைகள். உறவினர்கள் கூட தொட தயங்கும் நோயாளிகளை சற்றும் முகம்சுளிக்காமல் அருகில் சென்று அவர்களை அன்போடு கவனித்து இவர்கள் செய்யும் சேவை பாராட்டக்குரியது.
  • தன் வாழ்நாளில் ஒருமுறை கூட மருத்துவமனையை மிதித்து விட கூடாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் மருத்துவமனையே வாழ்க்கையாக்கி கொண்டவர்கள் செவிலியர்கள். ஒரு குழந்தையானது தன் தாயின் முகத்தை பார்ப்பதற்கு முன்பே செவிலியர்கள் தான் முதலில் அக்குழந்தையை அன்போடு அரவணைத்து கொள்கிறார்கள்.

Share it if you like it