அறநிலையத்துறையில் பணிபுரியும் அனைவரும் இறைவன் முன் தாங்கள் ஹிந்து என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

அறநிலையத்துறையில் பணிபுரியும் அனைவரும் இறைவன் முன் தாங்கள் ஹிந்து என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Share it if you like it

சிறுப்பான்மையினர் தங்கள் வழிப்பாட்டு தலங்களில் அவரின் மதத்தை சார்ந்தவரையே பணியில் நியமிக்கிறது. அதற்குரிய  சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் ஹிந்துக்களின் ஆலயங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அறநிலையதுறை என்னும் போர்வையில் திராவிட ஆட்சியாளர்கள் இறை மறுப்பாளர்களையும், தங்களின் சொல்படி செயல்படும் நபர்களையும், மாற்று மதத்தை சேர்ந்தவர்களையும், தங்கள் விருப்பபடி பணியாளர்களை நியமித்து ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருந்ததாக பலரின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம். இந்து அறநிலையதுறையில் பணி புரியும் ஆணையர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தான் இந்து என உறுதி மொழி எடுக்க வேண்டும் என்ற விதியை 8 வாரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த அறிவிப்பு போதாது சிறுப்பான்மையினர்களுக்கு அவர்களின் வழிப்பாட்டு தலங்களில்  என்ன உரிமை உள்ளதோ. அதே போன்று ஹிந்துக்களும் பெற வேண்டும் அப்பொழுது தான் முழுமையான வெற்றி என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்தினை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it