காஷ்மீரின் முக்கிய சாலைகளுக்கு  ”பாரத மாதா செளக்”  மற்றும் ”அடல்ஜி செளக்” என்று ஜம்மு நகரசபை அதிரடி தீர்மானம்!

காஷ்மீரின் முக்கிய சாலைகளுக்கு ”பாரத மாதா செளக்” மற்றும் ”அடல்ஜி செளக்” என்று ஜம்மு நகரசபை அதிரடி தீர்மானம்!

Share it if you like it

இந்தியாவில் அரைநூற்றாண்டுக்கு மேல் மற்ற மாநிலங்களை விட ஜம்மூ-காஷ்மீர் மாநில மக்கள் கடும் இன்னல்களையும், அடிப்படை உரிமைகளையும் கூட பெற முடியாமல் அமைதியற்ற சூழ்நிலையில் வாழும் அவல நிலையே அங்கு பரவி இருந்தது . இதனை போக்கும் விதமாக ஜம்மூ-காஷ்மீர் மாநில மக்கள் மற்ற மாநிலங்களை போல் அமைதி காற்றை சுவாசிக்கும் நிலையை உருவாக்க  வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டு இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இதற்கான விதையை தூவியது மத்திய அரசு. அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் ஜம்மூ-காஷ்மீர் நலன் கருதி சிறப்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அங்கு தொடர்ந்து அமைதி தவழவும், தீவிரவாதம் முற்றிலும் ஓழியவும் தனிகவனம் செலுத்தப்பட்டது.

இதற்கென்றே தனி ராணுவப்படை பிரிவு, விமானப்படை பிரிவு, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் இளைஞர்களை திருத்தும் விதமாக ’ஆப்ரேஷன் மா’ என்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மக்கள் நலன் சார்ந்து சிறப்பாக செய்து வருகிறது.

இந்நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்று அனைவராலும் பார்க்கப்படும் இடமாக  சிட்டி செளக் திகழ்கிறது. இதனை ”பாரத மாதா செளக்” என்றும் அதே போல் அப்பகுதியின் கண் என்று கூறும் அளவுக்கு பெயர் பெற்றது  சாலை செளக். இதன் பெயரையும் மாற்றி  முன்னால் பாரத பிரதமர் ”அடல்ஜி செளக்” என்று ஜம்மூ நகரசபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை அம்மாநில மக்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it