அலட்டிக்கொள்ளாத இந்தியா, பணிந்த அமெரிக்கா..!

அலட்டிக்கொள்ளாத இந்தியா, பணிந்த அமெரிக்கா..!

Share it if you like it

ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கு, அந்நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பொருளாதார தடை எச்சரிக்கை விடுத்தது. இதையும் மீறி 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை, தங்கள் எதிர்ப்பை மீறி, இந்தியா பெறுவதற்காக, அதன்மீது, பொருளாதார தடை விதிக்கப்படாது எனக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க, எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாதபோது, அதுகுறித்த பேச்சிற்கு இடமில்லை என்றார்.

இந்தியா தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதில் எந்த தவறு இல்லை என்றாலும், ஒருபுறத்தில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு, மறுபுறத்தில் ரஷ்யா உளவு பார்க்கத்துடிக்கும் என்றும், எனவே, அதில், இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரி கூறியுள்ளார்.


Share it if you like it