அழுகிய தேங்காய் சொல்லும் சேதி!

அழுகிய தேங்காய் சொல்லும் சேதி!

Share it if you like it

வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும் போது பயன்படுத்தும் முக்கியப் பொருள் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு.
கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

ஆகவே ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும்,
இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும்,
மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது.

இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு. தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் & ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வார்கள்.

ஒரு சிலர் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவார்கள்.ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி என்பது யாருக்கெல்லாம் தெரியும்.

அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி. ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை, , கண்திருஷ்டி, ரோகம், துர் சொப்பனங்கள் ஆகியவை அனைத்தும் பிரார்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.

 


Share it if you like it