பேரீச்சம்பழம் பணியாரம் சமைப்போம் சுவைப்போம்!

பேரீச்சம்பழம் பணியாரம் சமைப்போம் சுவைப்போம்!

Share it if you like it

தேவையான பொருட்கள் :

பதப்படுத்திய அரிசி மாவு – 2 கப்,

பேரீச்சம்பழம் – 20,

காய்ந்த திராட்சை – 10,

தேங்காய்த்துருவல் – 1/4 கப்,

பொடித்த முந்திரி – 1 டீஸ்பூன்,

வெல்லம் – சிறிதளவு,

உப்பு – சிறிது,

பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை :

பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். கடைசியாக அதனுடன் அரிசி மாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், வெல்லம், முந்திரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

Kuli Paniyaram

 


Share it if you like it