அசாமில் NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிர்வகிக்கும் பணியில் மாநில முன்னால் திட்ட அதிகாரியாக பெண் ஊழியர் ஒருவர் இருந்தார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி தனது பணியை ராஜினாமா செய்தார்.அவர் ராஜினாமா செய்வதர்க்கு முன் அலுவலக வலைத்தளத்தில் உள்ள அசாமின் திருத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டின் நகளுக்கான கடவுச்சொல்லை ஒப்படைக்காமல் சென்றுவிட்டார்.அதனை தெரிவிக்கும்படி பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டும் பதில் அளிக்காமல் இருந்தார்.இந்நிலையில் டிசம்பர் 15 அன்று அந்த தகவல் அனைத்தும் அலுவலக வலைத்தளத்திலிருந்து காணாமல் போனது.அதன்பின் டிசம்பர் 24 ஆம் தேதி அந்த பொறுப்பிற்கு ஹிதேஷ்தேவ் சர்மா என்பவர் புதிய அதிகாரியாக பொறுப்பேற்றார். இதை அறிந்த சர்மா அவர்கள் அந்த பெண் ஊழியர் மீது அலுவலகம் தொடர்பான விதிகளை மீறியதற்காக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.மேலும் அந்த ஆவணமானது ஆப்லைனில் இருந்து எடுக்க விப்ரோ நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் முக்கிய ஆவணத்தை தாரைவார்த்த பெண் ஊழியர் !
Share it if you like it
Share it if you like it