புல்வாமா துக்க தினத்தை அவமதித்த-ராகுல் காந்தி!

புல்வாமா துக்க தினத்தை அவமதித்த-ராகுல் காந்தி!

Share it if you like it

இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தற்கொலை படை தாக்குதல்  நடந்து இன்றோடு ஓர் ஆண்டு முடிவடைந்து. நாடே இன்று துக்க தினம் அனுசரித்து வருகின்றது. இந்நிலையில்  ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வழக்கம் போல் சிறுப்பிள்ளைதனமாக ஓர்  பதிவினை வெளியிட்டு இருப்பது காஷ்மீரில்  இன்னுயிரை இழந்த 40 ராணவ வீரர்களின் குடும்பத்தினர் மட்டுமில்லாது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். புல்வாமா தாக்குதலில் அதிகம் பயனடைந்தவர் யார்  என்று கேள்வி? எழுப்பியுள்ளார். இவரின் பதிவிற்கு  உலக நாடுகளின் அனைத்து உயரிய விருதுகளை பெற்ற ஓரே நாடான பாகிஸ்தான், மற்றும்  கம்யூனீஸ்ட், பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், என ஒட்டு மொத்த கூட்டமும் ராகுலின் பதிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸின் தவறான அணுகுமுறையால் நாட்டில் பல அசம்பாவிதங்கள் மட்டுமில்லாது மும்பை குண்டு வெடிப்பு போன்ற பல இன்னல்களில்   மக்கள் வாழும் சூழ்நிலை நிலவியது என்பதே நிதர்சனமான உண்மை.

இதனை அடுத்து  பி.ஜே.பி அரியனண ஏறியதுடன், நாடு மற்றும்  மக்களின் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியது, அதனை இரண்டு யூனியன் பிரசேதங்களாக பிரித்தது , பாகிஸ்தான் உள்ளே சென்று ஷர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிடலாம்.

ஆனால் ராகுல் காந்தி இந்திய மக்களின் மனம் புண்படும் படி  ஏதேனும்  டிவிட்டரில் பதிவு செய்வதை பாகிஸ்தான் தங்களுக்கு ஆதாரமாக ஜ.நா சபை வரை கொண்டு செல்வதும் பிறகு காங்கிரஸ் அதற்கு மழுப்பலான பதில் அளிப்பதும் பெரும் தலைவலியாக உள்ளது என்று காங்கிரஸ்காரர்கள் மட்டுமில்லாது சமூக ஆர்வலர்கள் வரை தங்களின் கருத்தை தெரிவித்துள்ளனர்.


Share it if you like it