ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாக்., வெளியேறவேண்டும் – பிரிட்டன் எம்.பி வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாக்., வெளியேறவேண்டும் – பிரிட்டன் எம்.பி வலியுறுத்தல்

Share it if you like it

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும். ஒட்டுமொத்த காஷ்மீர் பிராந்தியமும் இந்தியாவுக்குரியது என்று பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமுகத்தினர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

blank

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து, அதனை சர்வதேச அளவில் பெரிய பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. உண்மையில், ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் முழுவதுமே இந்தியாவுக்குரியது. அதன் ஒருபகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள பாகிஸ்தான் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டுமென்றுதான் ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மிகவும் உறுதியான முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் தலைமை வலுவாக உள்ளது சர்வதேச அளவில் உணரப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ருச்சி ஞானஷியாம் பேசுகையில், “காஷ்மீர் விஷயத்தில் நியாயமாக சிந்தித்து, இந்தியாவுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ள பாப் பிளாக்மேனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் மட்டுமல்ல. இதற்கு முன்பு பலமுறை இந்தியாவின் நியாயமான கோரிக்கைகளை நீங்கள் (பிளாக்மேன்) தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள்’ என்றார்.


Share it if you like it