மராட்டியத்தில் திடீர் என பாஜக, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளது. சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவாருக்கு , தேசியவாத காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவுக்கடிதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வருகைப் பதிவுக்காக எம்.எல்.ஏ.க்களிடம் பெறப்பட்ட கையெழுத்தை, மோசடியாக பயன்படுத்தி, அஜித்பவார் பதவியேற்றுள்ளார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் தகவலில், வாழ்க்கையில் யாரை நம்புவது? இதுபோன்று உணர்ந்ததே இல்லை. என்னுடைய வாழ்க்கையில் மோசம் போய்விட்டேன். அவரை பாதுகாத்தேன். அன்பு செலுத்தினேன். அதற்கு திரும்ப என்ன கிடைத்தது? கட்சியும், குடும்பமும் பிளவுபட்டு விட்டது என தெரிவித்து உள்ளார்.
மேலும் இது குறித்து இன்று மதியம் 12;30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் அஜித் பவாரின் இந்த முடிவு கட்சிக்கு முற்றிலும் எதிரானது என்றும் . அஜித் பவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரித்துள்ளார்.