Share it if you like it
ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நேற்று சட்டசபையில், நிறைவேறியது. இந்த மசோதாவில், எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆந்திராவில் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், சட்டசபை தலைநகராக அமராவதி மற்றும் நீதித் துறை தலைநகராக கர்னுால் அமைய உள்ளது. இதற்கான மசோதா, ஆந்திர சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலத்தின் பல இடங்களில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Share it if you like it