Share it if you like it
- தேனி மாவட்டத்தில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தேனியிலிருந்து டூர் விசாவில் கணேஷ்குமார் என்ற இளைஞர் துபாய் சென்றார். விசா முடிந்து ஊர் திரும்பும் வேளையில் கொரோனா நோய் தொற்றினால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் பீடிக்கப்பட்டு, ஈரல் பிரச்சனையாகி சுமார் 15 கிலோ குறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தாம் இறக்கப்போகிறோமா என்று மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார்.
- இவரது மோசமான சூழ்நிலையை அறிந்த தேனி மாவட்ட சேவா பாரதியின் தலைவர் சுந்தரேசன், அம்மாவட்ட பாஜக தலைவர் பாண்டியனிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட தலைவரும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களின் வழிகாட்டுதலுடன் மத்திய அமைச்சகத்திடம் முறையாக விண்ணப்பித்திருந்தார்.
- இதற்கிடையில் தேனி மாவட்ட பாஜக தலைவர் துபாயில் உள்ள தன் நண்பர்கள் மூலம் அவருக்கு உதவும் படி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று துபாயிலிருந்து விமானம் மூலம் கொச்சினுக்கு வருவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவருடைய சொந்த ஊருக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சேவாபாரதி நிர்வாகி மோகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
- மேலும் தேனி மாவட்டத்தில் இ-பாஸ் வாங்குவது குறித்தும், போக்குவரத்து வசதி குறித்தும் போடி நகர் பாஜக நிர்வாகி ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையில் தமிழக பாஜக நிர்வாகிகள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு தேனி மாவட்ட மக்களும் கணேஷ்குமாரின் குடும்பத்தினரும் பாஜக நிர்வாகிகளுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளத்தில் பரவ நெட்டிசன்கள் தமிழக பாஜகவினரை வாழ்த்து தெரிவித்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Share it if you like it