ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முழு நேர தொண்டர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர்.இவர்களை பிரச்சாரக் என்று அழைக்கிறார்கள்.
திருமணமாகாதவர்கள் தங்கள் குடும்ப நலனை விட சமுதாய நலன் மற்றும் தேச நலனே முக்கியம் என்று முழு நேரமும் சங்கப்பணியை மேற்கொள்கிறார்கள். இவர்களுக்கு சம்பளமும் கிடையாது.
அடிப்படை செலவுக்கு மட்டும் பணம் தரப்படும், அதற்கும் உரிய பில் சமர்ப்பிக்க வேண்டும். தங்குவது, உணவு அனைத்தையுமே மற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏற்பாட்டில். தங்களுக்கு என்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. இவர்கள் கிட்டத்தட்ட ஒரு ரிஷி போல பணியாற்றுகிறார்கள்.
இப்போது காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சிக்குள் பிரச்சாரக் தேடுகிறது. முழு நேரமாக பணியாற்ற விரும்புவோரை ப்ரேரக் என அழைக்கிறார்கள்.
இதற்கு முன்பு இரண்டு முறை ஆர்.எஸ்.எஸ். போல செயல்படுத்த நினைத்து காங்கிரஸ் தோற்றுப் போய் உள்ளது. காரணம்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளோர் பணமோ, புகழோ, பதவியோ எதிர்பார்ப்பதில்லை. காங்கிரஸ் கட்சியில் பணம், புகழ் தேடாத ஒரு வட்ட செயலாளரை காட்ட முடியுமா?
காங்கிரஸ் கட்சிக்கு, முழு நேர தொண்டர்களை விட முழு நேர தலைவர் தான் தேவை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.