நமக்கான எதிரி அந்நிய ஆக்கிரமிப்பாளர்களே என்று மக்களுக்கு புரியவைத்து மாபெரும் ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் சத்ரபதி சிவாஜி !

நமக்கான எதிரி அந்நிய ஆக்கிரமிப்பாளர்களே என்று மக்களுக்கு புரியவைத்து மாபெரும் ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் சத்ரபதி சிவாஜி !

Share it if you like it

சத்ரபதி சிவாஜி நினைவு நாள் ஏப்ரல் 3, 1680

சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்தவர். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார்.

ஹிந்து சாம்ராஜ்யம் அமைக்க வேண்டிபிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் அன்னை பவானி கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம், நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகள் பேரரசர் சிவாஜியின் சிறப்பு .

பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார்.

அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார்.

அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச்சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.

மிகப்பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் “இந்திய கடற்படையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன.

கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் சிவாஜி மகாராஜ் சுதந்திர போராட்ட வீரர்களின் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசராக நினைவு கூறப்படுகிறார். மேலும் இந்திய வரலாற்றில் உள்ள ஆறு பொற்காலங்களில் ஒன்றாக அவர் ஆட்சி புரிந்த காலம் போற்றப்படுகிறது.

சிவாஜி மகாராஜாவின் ஆட்சி ஒரு வீரம் மிகுந்த, முன்மாதிரியானது என, மஹாராஷ்டிராவின் பள்ளிக்கூட பாடப்புத்தகங்கள் விளக்குகின்றன.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *