ஆறு இடங்களில் அனுமதி மறுக்கப்பட்ட இஸ்லாமியர் உடலுக்கு இடம் கொடுத்த ஹிந்து மயானம்!

ஆறு இடங்களில் அனுமதி மறுக்கப்பட்ட இஸ்லாமியர் உடலுக்கு இடம் கொடுத்த ஹிந்து மயானம்!

Share it if you like it

தெலுங்கான மாநிலம் ரங்க ரெட்டி மாவட்டத்தில் வசித்து வந்த முகமது காஜா மியான் (55) என்னும் இஸ்லாமியர் அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவரின் உடலை மத வழக்கப்படி அடக்கம் செய்ய அக்குடும்பம் முடிவு செய்தது. ஆனால் அவர் கொரோனா தொற்றில் இறந்து இருக்க கூடும் என்று காஜா மியான் உடலை  அடக்கம் செய்ய மறுத்து விட்டனர்.

இதனை அடுத்து என்ன? செய்வது என்று அறியாமல் திகைத்த நின்ற குடும்பத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த, சந்தீப் மற்றும் சேகர், இருவரும் அவர்களுக்கு உதவ முன்வந்தனர் இறந்தவரின் உடலை இந்து மயானத்தில் அடக்கம் செய்தனர்.

எனது தந்தையின் உடலை அடக்கம் செய்ய கிட்டதட்ட ஆறு முஸ்லீம் கல்லறைகளில் அனுமதி கேட்டோம். ஆனால் யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று காஜா மியான் மகன் முகமது பாஷா வேதனையுடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it