சென்னையில் திமுக கோட்டை உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது – அண்ணாமலை !

சென்னையில் திமுக கோட்டை உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது – அண்ணாமலை !

Share it if you like it

மத்திய சென்னையில் பா.ஜ.க.சார்பில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில்…

ஒரு பெரிய அரசியல் புரட்சி சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் தி.மு.க. கோட்டை உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . எம்.பி.யாக இருக்க தகுதி இல்லாதவர் தயாநிதி மாறன். பில்கேட்ஸ்க்கு சமமாக இருக்கும் குடும்பம் கோபாலபுரத்துக்கு பக்கத்தில் உள்ள குடும்பம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தரையில் போட்டு அழித்தவர். கோடிக்கணக்கான ஊழல். தனது சகோதரர் நிறுவனத்துக்காக பி.எஸ்.என்.எல்-ஐ தவறாக நடத்தியவர்.

தமிழ்நாட்டின் எதிரி ஸ்டாலின். இந்தி கூட்டணியில் பிரதமர் யார் என்பதே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கை வந்த உடன் சென்னை மக்களுக்கு படகு உண்டா என்று தான் முதலில் பார்த்தேன். தைரியமாக தேர்தல் அறிக்கையில் பொய் சொல்லி உள்ளார்கள். மத்திய அரசை வலியுறுத்துவோம் என ஒரு கட்சி சொல்கிறது. வலியுறுத்தும் கட்சிக்கும், பொய் சொல்கிற கட்சிக்கும் ஏன் வாக்களிக்க வேண்டும்.

வினோஜ் பி.செல்வம் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமக்கு தேவை இமாலய வெற்றி. மழை வெள்ளத்தில் சென்னை மக்களுக்கு திமுக அரசு வழங்கிய 6000 ரூபாயில் ரூ.5,400 மத்திய அரசு கொடுத்தது. அண்ணாமலை அரசியல் கோட்டாவுக்கு எதிராக உள்ளவன். ஆவின் பால் விவகாரத்தில் அரசு தப்பு செய்கிறது. மு.க.ஸ்டாலின் நண்பர் ஜாபர் சாதிக். அவருடன் முதல்வர் எத்தனை போட்டோ எடுத்துள்ளார்.” என்று பேசினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *