Share it if you like it
- மங்களூரு அருகே பெல்தங்கடி தாலுகா மூட்கோடி கிராமத்தில் உள்ள பால்குனி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இறந்த மீன்களைப் பரிசோதித்ததில் அந்த ஆற்றில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- பெல்தங்கடி காவல்துறையினரின் விசாரணையில், சில சமூக விரோத சக்திகள் வேண்டுமென்றே தண்ணீரை விஷம் வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மே 5 ம் தேதி, இர்ஷாத் மற்றும் முஹம்மது ஹனிப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் இன்னும் பலர் இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அருகிலுள்ள மூதுகோடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களின் செயலுக்கான காரணம் இன்னும் காவல் துறையினரால் வெளியிடப்படவில்லை.
- சமூக விரோத சக்திகளால் இதுபோன்ற குற்றச் செயல்கள் மீண்டும் நிகழும் என்று அஞ்சும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். ஏராளமான மக்களைக் கொன்றிருக்கக்கூடிய நதி நீரில் விஷம் கலந்ததற்கான காரணத்தைக் கண்டறியுமாறு கிராம மக்கள் காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர்.
Share it if you like it