ஆள்கடத்தல் செய்த ராஜா உசேன் – கைது செய்த காவலர் பணியிட மற்றம்

ஆள்கடத்தல் செய்த ராஜா உசேன் – கைது செய்த காவலர் பணியிட மற்றம்

Share it if you like it

கடந்த 10.03.2020 அன்று பைசூதின் என்பவரை கடத்தியதாக வந்த தகவலை அடுத்து. சென்னை ராயபேட்டையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரை ஆய்வாளர் திரு.மோகன் தாஸ் என்பவர் சோதனை செய்துள்ளார். அப்போது காருக்குள் இருந்த ராஜா உசேன் உள்ளிட்ட சிலர் காவலரை கடுமையாக தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராஜா உசேன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.இதில் தைரியமாக செயல்பட்ட ஆய்வாளர் திரு.மோகன் தாஸ் பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

(10/03/2020) அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஒருவர் வந்து , திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தன் நண்பர் பைசூதின் என்பவரை சென்னை மவுண்ட் ரோடு புகாரி ஓட்டல் அருகில் இருந்து ஒரு சிலர் காரில் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து , கிடைத்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை மணிக்கூண்டருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரை வழிமறித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன்தாஸ் சோதனை செய்துள்ளார் அப்போது, காருக்குள் இருந்தவர்கள் அவரை நடு சாலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட போதும் பொது மக்கள் யாரும் இந்த தாக்குதலை தடுக்க முயற்சிக்கவில்லை.

கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட ஆய்வாளரை அரைமணி நேரத்திற்கு பிறகு சில காவல்துறையினர் சென்று மீட்டு, ராஜா உசேன் என்ற நபர் உட்பட ஐந்து நபர்களை கைது செய்தனர்.

இந்த ராஜா உசேன் என்பவன் தான் 1994 ஹிந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தை சார்ந்தவன். தற்போது இந்திய தேசிய லீக் என்ற கட்சியின் நிர்வாகிகளில் ஒருவன்.

இந்த நபர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களுடன் நடு தெருவில் போராடி கைது செய்து விசாரித்த ஆய்வாளர் திரு.மோகன்தாஸ் அவர்கள் தற்போது அந்த காவல் நிலைய பணியில் இருந்து பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிட மற்றம் செய்யப்பட்ட உத்தரவு
பணியிட மற்றம் செய்யப்பட்ட உத்தரவு

இவ்விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தனது முகநூல் பக்கத்தில்..

1.10/03/2020 அன்று நடைபெற்ற சம்பவத்தில் தாக்கப்பட்டு, கடத்தல் காரர்களை கைது செய்த ஆய்வாளர், 09/03/2020 தேதியிட்டு கடிதம் மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டது எப்படி?
2.மேலும், நிர்வாக ரீதியிலான மாற்றம் என்று சொல்லும் அதே உத்தரவில் அவரை ‘பதற்றம் இல்லாத ‘ (Non-Sensitive Post) பணியிடம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது ஏன்?
3.காவல்துறை ஆய்வாளருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதாலா? 4.அப்படியென்றால் காவல் துறையினருக்கே #பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளதா?
5.அல்லது ராஜா உசேன் உள்ளிட்டோரை கைது செய்தது தவறு என்ற அழுத்தத்தின் காரணமாக ஆய்வாளருக்கு பணியிட மாற்றமா?
6.நட்ட நடு சாலையில் துணிச்சலோடு செயல்பட அந்த காவல் ஆய்வாளரை பாராட்டும் அதே வேளையில்,தமிழகத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா? 7.அரசியல் நிர்பந்தத்திற்கு பணிந்ததா காவல் துறை?

போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.


Share it if you like it