பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்டவர் அனிஸ் பாரூக்கி. பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் அவலங்களை கண்டு அவ்வபொழுது தனது கடும் விமர்சனங்களை முன் வைக்க கூடியவர்.
இந்திய ஊடகங்கள் மறைக்கும் நல்ல செய்திகளை இவர் தனது டுவிட்டர் பக்கங்களில் வெளியிடுவதும். போலி ஊடகங்களின் முகத்திரையை கிழிப்பதையே வழக்கமாக கொண்டவர்.
அண்மையில் அனிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை ஒன்றினை வெளியிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு இஸ்லாமியர் தொழுகையில் ஈடுப்படும் பொழுது ஒரு ஹிந்து சகோதரர் அவரை பாதுகாக்கிறார். இன்று உலகிற்கு இந்த முன் மாதிரியான நல்லிணக்கமும், அன்பும், தேவை., சனாதன தர்மம் ஜாதி, வர்க்கம் என்று பொருட்படுத்தாமல் அனைத்து இந்துக்களுக்கும் உள்ள கடமையை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
A Muslim colleague is praying while Hindu partner is protecting him.
Today world needs this exemplary harmony and love that exists in India where Sanatana dharma practices the “eternal” set of duties incumbent upon all Hindus, regardless of class, caste, or sect.
धन्यवाद 🙏🙏 pic.twitter.com/TWTH4VNwOc
— Anis Farooqui (@anis_farooqui) May 9, 2020