மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. முந்தைய அரசு போல் அல்லாமல் மிக தீவிரமாக எல்லை பகுதிகளை பலப்படுத்தி வருகிறது. இதனை சற்றும் பொறுத்து கொள்ள முடியாத சீனா அர்த்தமற்ற முறையில் இந்தியாவிடம் பிரச்சனை செய்து வருகிறது.
இந்நிலையில் சீனாவின் மிகப்பெரிய இராணுவ தொழில்துறை நிறுவனமான நோரிங்கோ குழுமத்திற்கு சொந்தமான பாதுகாப்பு பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ஹுவாங் குயோஜி இவ்வாறு கூறியுள்ளார்.
12 மலைப் பிரிவுகளில் 2,00,000 ராணுவ வீரர்களை கொண்ட நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவத்தை அந்நாடு கொண்டு உள்ளது. மலையேறுதல் என்பது ஒவ்வொரு இந்திய ராணுவ வீரருக்கும் கைவந்த கலை. அமெரிக்கா, ரஷ்யா, ஜரோப்பா ராணுவ வீரர்களை விட இந்திய ராணுவ வீரர்கள் சிறந்தவர்கள். இந்தியாவிடம் கவனமாக இருங்கள் என்று சீனாவை எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது