இந்தியாவின் துணை ராணுவப் படையினர் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிதி!

இந்தியாவின் துணை ராணுவப் படையினர் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிதி!

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடியின்  வேண்டுகோளை ஏற்று விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், வரிசையில் PM CARES க்கு நிதி வழங்கிய துணை ராணுவப் படையினர்.

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள, மக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட, மக்களுக்கு தொற்று கிருமி, உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்நோய் தொற்று, மேலும் பரவாமல் இருக்க, மத்திய அரசு பல்வேறு, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு, இணங்க விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், என பலர் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில்

அனைத்து துணை ராணுவப் படையினரும், தங்கள் ஒரு நாள் சம்பளத்தை, (மொத்தம் ரூ. 116 கோடி) PMCARES க்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், நேரில் சென்று  வழங்கியுள்ளனர். COVID 19 எதிர்த்துப் போராட பிரதமர் நரேந்திர மோடியின்  வேண்டுகோளை ஏற்று ராணுவ வீரர்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அமித்ஷா தனது நன்றியினை தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it