சீனாவின் உள்ளடி வேலைகளையும் மீறி 184 நாடுகளின் ஆதரவை பெற்று இந்தியா ஜ.நா சபையில் 8வது முறையாக இடம் பெற்றது. உலக சுகாதார மையத்தில் இந்தியாவிற்க முக்கிய பொறுப்பு. உலக நாடுகளின் மிக சிறந்த நண்பனாக இந்தியா திகழ்வது போன்றவை. சீனாவின் கனவு திட்டத்திற்கு பாரத நாடு மிக பெரும் தடையாக இருக்கும் என்கின்ற காரணத்தினால்.
இந்தியாவின் நற்பெயரை கெடுத்து, உலகின் கவனத்தை திசை திருப்பலாம் என்பதே சீனாவின் திட்டம். இதன் தொடர்ச்சியாகவே நமது எல்லை பகுதியில் அடாவடி தனத்தை இன்று வரை தொடர்ந்து செய்து வருவதாக அரசியல் நோக்கர்களின் கருத்து.
சீனாவின் பல்வேறு ஒப்பந்தங்கள் ரத்து, சீன செயலிகளுக்கு தடை, இந்திய ராணுவ வீரர்களின் இழப்பிற்கு பதிலடியாக. வர்த்தக போரை அந்நாட்டிற்கு எதிராக துவங்கி விட்டதை அண்மை காலமாக உணர முடிகிறது. இதனை பொறுத்து கொள்ள முடியாத சீனா தற்பொழுது தனது கீழ்த்தரமான நரிதந்திரத்தை துவங்கி விட்டது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அல் பத்ர் பயங்கரவாத குழுக்களுடன் சீனா காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுமாறு பேசி இருப்பது இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1278189029981388805
https://twitter.com/FrontalAssault1/status/1278222099841155072