Share it if you like it
- இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர சிங் ஜடேஜா தன் வாள் திறனை காட்டுவதற்காக ஒரு வாளை சுழற்றி அதை வீடியோ எடுத்துள்ளார். பின் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஒரு வாளானது அதன் பிரகாசத்தை இழக்குமே தவிர அதனின் தலைவருக்கு கீழ்ப்படியாமல் ஒருபோதும் இருக்காது என்று பதிவிட்டுருந்தார்.
A “SWORD” MAY LOOSE IT’S SHINE,BUT WOULD NEVER DISOBEY IT’S MASTER #rajputboy pic.twitter.com/kKyKQ9vSWk
— Ravindrasinh jadeja (@imjadeja) April 12, 2020
- அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலே சில நடுநிலைவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆகியோர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவரை தரக்குறைவாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அவரை மட்டுமல்லாமல் ரஜபுத்ர சமூகத்தையும் சேர்த்து தரக்குறைவாக விமர்சித்து உள்ளனர்.
- அசோக் ஸ்வின் என்கிற நடுநிலைவாதி ஜடேஜாவை விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில், ரஜபுத்திரர்கள் எத்தனை போர்களை வென்றார்கள்? முகலாய நீதிமன்றங்களில் எத்தனை ரஜபுத்திரர்கள் பணிபுரிந்தனர்?
இந்த முட்டாள் ஒரு கிரிக்கெட் வீரர், இந்திய அணிக்காக விளையாடுகிறார், அவரது சாதிக்கு அல்ல என்று நம்புகிறோம். இவ்வாறு ஒரு பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/ashoswai/status/1249580947550482434?s=20
- மேலும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியான எலியா மிலியா இஸ்லாமியா என்பவர், ஜடேஜாவையும், ரஜபுத்ர சமூகத்தை விமர்சிக்கும் வகையில், ரஜபுத்திரர்கள் பாரசீகரிடம் தோற்றனர், மொகலிடம் தோற்றனர், கில்ஜியிடம் தோற்றனர், மராட்டியிடம் தோற்றனர், பிரிட்டிஷாரிடம் தோற்றனர்.வெற்று நிலத்தில் நின்றுகொண்டு , எதற்காக இந்த வித்தியாசமான விஷயம். என்று பதிவிட்டுள்ளார். இதுபோல் பல இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், நடுநிலைவாதிகளும் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்கள்.
Rajput Persian se haare, Moghal se haare, Khilji se haare, Maratha se haare, British se haare!
Khali maidan mein talwar ghumana is different thing. https://t.co/YcEShbCwjp
— Mr. Khurafati (@elia_official) April 13, 2020
- ஒரு பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரரை பலரும் பார்க்கும் வண்ணம் சமூக வலைதளத்தில் தரக்குறைவாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், நடுநிலைவாதிகளும் விமர்சித்தது கண்டனத்துக்குரியது. கொஞ்சம் மனிதநேயத்துடன் சமூக வலைதளங்களில் நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Share it if you like it