Share it if you like it
அண்மையில் இந்திய ராணுவத்தை பற்றி ஒரு போலி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மக்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் திருமாவளவன். இது இந்திய ராணுவத்தின் வீரத்தை இழிவுப்படுத்தும் செயல் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் மீண்டும் தனது டுவிட்டர் பகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
எல்லையில் இந்தியப் படையினர் 20 பேர் பலி. துப்பாக்கிச்சூடு இல்லை. உருட்டுக்கம்பிகள், உருட்டுக்கட்டைகள், கற்கள் போன்றவற்றால் தாக்கியுள்ளனர். பலருக்கு ஆபத்தான நிலை. ஒரேநேரத்தில் பாகிஸ்தான், நேபாளம், சீனா சீண்டல். பிரதமர் நாட்டு மக்களிடையே பேசவேண்டும்.
- சீனாவின் அத்துமீறலுக்கு துளியும் கண்டனம் இல்லை,
- உண்மை உள்ள இந்தியா பக்கம் நிற்பேன் என்று கூறவில்லை.
- மூன்று நாடுகளின் உண்மை முகத்தை நாட்டு மக்களுக்கு எடுத்து கூறுவேன் என்று கூறவில்லை.
- மோடி மீது உள்ள வன்மத்தால் தொடர்ந்து இந்திய ராணுவத்தையும், இந்தியாவையும் விமர்சனம் செய்வது வெட்ககேடான செயல் என்று மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it