இந்தியாவிற்கான சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜி ரோங் நேற்று புது டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது “கொரோனாவிற்கு எதிராக இந்தியாவின் தீவிரமான முயற்சிக்கு, சீன நிறுவனங்கள் தேவையான ஆதரவையும், உதவிகளையும் அளிப்பதற்கு தயாராக உள்ளன.
சீனா பாதிப்படைந்திருந்த சமயத்தில் 15 டன் அளவில், மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது. அதில் முகக்கவசங்கள், கை உறைகள், மற்றும் பிற மருத்துவ சாதனங்களையும் வழங்கியது. சீனாவும் இந்தியாவும் தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வருவதோடு, கடினமான காலங்களில் தொற்றுநோயைச் சமாளிப்பதில் ஒருவருக்கொருவர் ஆதரவையும் அளித்து வருகின்றன. இந்திய மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அதற்காக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
கொரோனா தொற்று குறித்த தகவல்களை சீனா பகிர்ந்து கொண்டது. கொரோனாவுக்கு எதிரான தனது அனுபவங்களை ஆன்லைன் வீடியோவில் சீனா கூறியுள்ளது. இந்தியா வீரைவிலேயே கொரோனாவில் இருந்து மீளும் என நாங்ககள் நம்புகிறோம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இணைந்து, ஜி20, பிரிக்ஸ் நாடுகள் மூலமாக சீனா ஒத்துழைப்பு வழங்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.