இஸ்லாமிய  மதரஸாவில் 144 தடையையும் மீறி 600 சிறுமிகளை கட்டாயப்படுத்தி மதவகுப்பு !

இஸ்லாமிய மதரஸாவில் 144 தடையையும் மீறி 600 சிறுமிகளை கட்டாயப்படுத்தி மதவகுப்பு !

Share it if you like it

  • ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ள ஒரு மதரஸாவில் சுமார் 500 சிறுமிகள் வலுக்கட்டாயமாக பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் பெற்றோர்களும் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் ராஞ்சியில் பர்ஹேபட்டில் அமைந்துள்ள மதரஸாவை சோதனை செய்ய அங்கு சென்றனர்.
  • அங்கு மதராசாவின் வாயில் வெளியில் இருந்து மூடப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்த காவல் துறையினர் மதரஸா கேட்டை உடைத்தபோது, ​​அங்கு 600 சிறுமிகளை உள்ளே பூட்டிவைக்கப்பட்டிருந்தனர். வுஹான் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் விதித்த நாடு தழுவிய 144 தடையை மீறி, மதரஸாவினர் தனது மத வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.
  • மேலும் அந்த 600 சிறுமிகளை காவல்துறையினர் விடுதலை செய்து அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நடவடிக்கையின் போது சுமார் 500 சிறுமிகள் ஹாஸ்டலில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 144 தடையை மீறியதற்காக மதரசா முதல்வர் அப்துல் அன்சாரி மற்றும் செயலாளர் இம்ரான் அன்சாரி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 


Share it if you like it