ஐம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தால் அவர்களை முன்பெல்லாம் ராணுவம் சுட்டு வீழ்த்தி கொண்டு இருந்தது.. இதில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் உள்ளூர் இளைஞர்களும் கொல்லப்படுவர். இதனால் இறந்த இளைஞர் தியாகியை போல் மாற்றப்பட்டு மேலும் பல இளைஞர்கள் ராணுவத்திற்கு எதிராக பொங்கி எழுவர்.
இதனை தடுக்கும் பொருட்டு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபரின் பெற்றோரை நேரடியாக களத்திற்கு கூட்டி வந்து அவர்களிடம் பேசும் பொழுது சிலர் மனம் திருந்தி ஆயுதத்துடன் சரண்டர் ஆகிவிடுகின்றனர். இதனால் அந்த இளைஞர் உயிர் இழக்கும் நிலை மாறுவதுடன் மனம் திருந்தி குடும்பத்துடன் சேர்ந்து வாழவும் ராணுவம் வாய்ப்பு வழங்குவதால்.
பல இளைஞர்கள் மெல்ல மெல்ல தீவிரவாதத்தை விட்டு அமைதி பாதைக்கு திரும்புவதால் ’ஆப்ரேஷன் மா’ நல்ல பலனை அளித்திருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் பதுங்கி இருக்கும் மற்ற தீவிரவாதிகளின் இருப்பிடத்தையும் சரண்டர் ஆகும் இளைஞர் மூலம் தெரிந்து கொள்வதால். நரிகளை வேட்டையாடுட சிங்கங்களுக்கு மிக எளிய வாய்ப்பாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/AlphaWo40963407/status/1279633163480821761