Share it if you like it
புனேவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கடந்த 6 வரங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. இவ்வியந்திரத்தை கொண்டு ஒரு வாரத்தில் சுமார் 1.1/2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யமுடியும் என தகவல். இதன் விலை 80,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று முதல் இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு வரும் என தகவல். நாள் ஒன்றுக்கு 15000 கருவிகளை உற்பத்தி செய்யமுடியும் என கூறப்படுகிறது.உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் இயந்திரத்தை இந்தியர்கள் தான் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனாவிற்கு எதிராக இந்தியா நடத்தும் போரில் இது ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
Share it if you like it