தி.மு.க.வை (திராவிடர் முன்னேற்றக் கழகம்) சேர்ந்த தலைவர்கள் தங்களுடைய தாய் கழகமான தி.க.வில் (திராவிடர் கழகம்) இருந்து வந்தவர்கள். இந்துக்களை எந்த அளவிற்கு “திராவிடர் கழகம்” வசை பாடியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் இந்து மதத்தை மட்டுமே குறி வைத்து, தாக்கியது, கடும் சொற்களில் பேசியது, நம் அனைவருக்கும், என்றென்றும், மறக்க முடியாத வாக்கியமாகவே, மனதில் பதிந்து இருக்கும். இந்துக்களை மட்டும் தாக்குவது என்பது தி.மு.க.விற்கு வாடிக்கை.
ஆரம்பத்தில் இருந்தே பெரியார் தொடங்கி அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என தி.மு.க.விற்கு தலைவராக வருபவர்கள் எல்லாம் இந்துக்களை தாக்கிப் பேசுவது வாடிக்கையான விஷயம்.
திராவிடர் கட்சி தோன்றிய வரலாறு:
பிராமணர் சமுதாயம் தவிர, மற்ற சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் அமைப்பாக “நீதிக் கட்சி”, 1917 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. அரசியல் கட்சியாக, சர். பி.டி. தியாகராய செட்டியார் மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப் பட்டது. பின்னர், “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்” எனப் பெயரிடப் பட்டு, “நீதிக் கட்சி”யாக பெயர் மாற்றம் கண்டது.
1934 ஆம் ஆண்டு, அண்ணா துரை, நீதிக் கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்போது நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். அண்ணா துரை நீதிக் கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்று இருந்தார். பின்பு, 1938 ஆம் ஆண்டில், “விடுதலை” மற்றும் அதன் துணைப் பத்திரிகையான “குடியரசு” பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு, தனியாக “திராவிட நாடு” என்ற தனி நாளிதழை (திராவிட நாடு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப் பட்டது) தொடங்கினார். 1944-ல் சேலத்தில் நடந்த மாநாட்டில், பெரியார் “நீதிக் கட்சி”யை, “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கை விட்டார்.
இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, 1947 நாளை “கறுப்பு தினமாக” எடுத்துக் கொள்ளுமாறு, பெரியார் தன்னுடைய தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். அண்ணா துரை இந்தக் கருத்தில் மாறு பட்டார். இதுவே, பெரியாருக்கும், அண்ணாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து வேறு பாட்டால், விரிசல் ஏற்படக் காரணமாக அமைந்தது.
இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் வட இந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல என்பதை அண்ணா துரை வலியுறுத்தினார்.
திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்கு கொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணா துரை முரண் பட்டார். வயது முதிர்ந்த பெரியார், மிகவும் இளைய வயதான மணியம்மையை திருமணம் செய்ததும், திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்கு மிகுந்த கவலையை அளித்தது. அதனால், மனக் கசப்பு ஏற்பட்டு, திராவிடர் கழகத்திலிருந்து விலகி, செப்டம்பர் 17, 1949 ஆம் ஆண்டு, சென்னை ராயபுரத்தில் உள்ள “ராபின்சன் பூங்கா”வில் நடந்த கூட்டத்தில், “திராவிடர் முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் அண்ணா துரை தலைமையில், “திராவிடர் கழகத்தில்” இருந்து விலகி புதிய கட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது.
அரசியலுக்கு வந்த பின்னர் அண்ணா துரையிடம் ஏற்பட்ட மாற்றங்கள்:
இந்து கடவுள்களை மிகவும் கீழ்த் தரமாக விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டு இருந்த அண்ணாதுரை, அரசியலுக்கு வந்த பின்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து, அண்ணா துரை எழுதிய “நீதி தேவன் மயக்கம்”, என்ற நூல் அழகப்பா பல்கலைக்கழகத்தின் MA தமிழ் பாடத் திட்டத்தில் இடம் பெற்று இருந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு, அது பாடத் திட்டத்திலிருந்து நீக்கப் பட்டு விட்டது. மதுரை மீனாட்சி அம்மனை, மிகவும் ஆபாசமாக, அண்ணா துரை விமர்சனம் செய்ததற்காக, தேவர் அவர்கள் மிகவும் கடுமையாக அண்ணா துரையை சாடினார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இந்துக்களின் மனதை கவர்வதற்காக, பெரியாரின் கடவுள் மறுப்பை மாற்றி, தி.மு.க.வின் நிலைப்பாடாக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று அறிவித்தார் அண்ணா.
அது பெரியாரின் நிலைப் பாட்டை நீர்த்துப் போகச் செய்தது. “பெரும் பான்மையான மக்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உள்ள தமிழகத்தில், அவர்களது நம்பிக்கைக்கு மாறாகப் பேசி, தேர்தல் அரசியல் நடத்துவது கடினம். எனவே, பெரியாரைப் போல பேசாமல், இந்துக்களுடன் இணக்கமாகப் போக வேண்டிய தேவை, தேர்தலில் வெற்றி பெற, அண்ணா துரைக்கு இருந்தது. அதனால், திருமூலரிடம் இருந்து “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற வரியை அண்ணா துரை எடுத்துக் கொண்டார்.
கருணாநிதியின் இந்து மதம் துவேஷம்:
1996 ஆம் ஆண்டு, அப்போதைய திமுக ஆட்சியில் இருந்த அமைச்சரான, அந்தியூர் செல்வராஜ், அம்மன் கோவில் ஒன்றில் தீ மிதித்ததை, “காட்டு மிராண்டித்தனமான செயல்”, என கலைஞர் விமர்சனம் செய்தார். அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.
2002 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, “இந்துக்கள் என்றால் திருடன்” என்று கூறினார்.
எந்த கல்லூரியில், ராமபிரான், பொறியியல் படித்தார், பாலம் கட்டுவதற்கு? என இந்து கடவுளான ராமரை எள்ளி நகையாடினார்.
ஸ்டாலினின் இந்து மதம் துவேஷம்:
வேற்று மத திருமணங்களுக்கு சென்ற ஸ்டாலின், இந்து மதங்களின் திருமண முறையையும், மந்திரத்தின் அர்த்தத்தையும் தவறான முறையில் விமர்சனம் செய்து பேசியது, சமூக வலைத் தளத்தில் எங்கும் பரவியது. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும், இந்து மதத்தின் பண்டிகை என்றால், வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பதும், ஸ்டாலினின் இரட்டை வேடம் என பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 அன்று, தனது முகநூல் பக்கத்தில், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய ஸ்டாலின், பின்னர், 2014, ஆகஸ்ட் 31 அன்று, தன்னுடைய அட்மின் செய்த தவறு எனவும், கூறிய “விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” எனவும், அறிக்கை வெளியிட்டார். இதனால், பொது மக்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்களும் ஸ்டாலின் மீது கோபம் கொண்டனர் என்ற செய்தி, அப்போது உலா வந்தது.
இதனால் கலக்கம் அடைந்து, 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் தொகுதியில், பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தனது மனைவி கோவில்களுக்குச் செல்வதை, தான் தடுப்பது இல்லை எனவும், எம்மதமும் சம்மதம் என்பதே தங்களது கொள்கை எனவும், ஒரு புதிய விளக்கத்தை கூறினார்.
90 சதவீதம் இந்துக்கள் உள்ள கட்சி, திமுக எனவும், அறிக்கை வெளியிட்டார், ஸ்டாலின். எனினும், தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை, தான் நேரடியாக கண்டிக்காமல், தனது கட்சியை சேர்ந்த RS பாரதியை வைத்து, கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டார். மற்ற எல்லாவற்றிற்கும் அறிக்கை வெளியிடும் ஸ்டாலின், இந்து கடவுளுக்கு நிந்தனை ஏற்படும் போது மட்டும், தானே முன் வந்து, தன்னுடைய பெயரிலேயே, ஏன், இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என பொது மக்களோடு கட்சிக் காரர்களும் கேட்டுக் கொண்டு வருகின்றார்கள்.
அக்டோபர் 30, 2020 அன்று தேவர் ஜெயந்தி விழாவுக்காக பசும்பொன் சென்று இருந்த ஸ்டாலின், அங்கு பெற்ற விபூதியை வாங்கி, அதை நெற்றியில் பூசாமல் இருந்தது, ஹிந்துக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. “GoBackStalin” (கோ பேக் ஸ்டாலின்) எனவும், ட்விட்டரில் அன்று ட்ரெண்ட் ஆனது.
உதயநிதியின் இந்து மதம் துவேஷம்:
அக்டோபர் 26, 2020, விநாயகர் சதுர்த்தி அன்று, உதயநிதி, விநாயகர் சிலை உள்ள படத்தை, ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். பின்னர், தன்னுடைய மகளின் விருப்பத்திற்கு இணங்க பதிவிட்டதாக, ஒருவித புது விளக்கத்தை கொடுத்தார்.
நவம்பர் 20, 2020 அன்று திருச்சி வந்த உதயநிதிக்கு, கைலாசநாதர் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப் பட்டது, அதனை ஏற்க, உதயநிதி மறுத்து விட்டார்.
பாரதத்தில் 2001 ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலவரம்:
80.5 சதவீதம் இந்துக்கள்,
13.4 சதவீதம் இஸ்லாமியர்கள்,
2.3 சதவீதம் கிறிஸ்துவர்கள்,
1.9 சதவீதம் சீக்கியர்கள்
0.8 சதவீதம் பவுத்தர்கள்,
0.4 சதவீதம் ஜெயினர்கள்.
வேறு எந்த நாட்டிலும், பெரும்பான்மை மதத்திற்கு எதிராக, யாரும், எந்தக் கருத்தையும், கூற முடியாது. அவர்களூடைய நம்பிக்கைக்கும், பழக்க வழக்கத்திற்கும் எதிராக, எவரேனும் கருத்து கூறினால், அவர்களை, அந்த நாட்டு மக்கள், முற்றிலும் புறக்கணிப்பார்கள். ஆனால், தமிழகத்தில், பெரும் பான்மையாக வாழும், இந்துக்கள் மனதை மட்டுமே புண்படுத்தும் வகையில், பேசுவதை, வாடிக்கையாக கொண்டு இருப்பதும், ஹிந்துக்களின் கடவுள்களை நிந்தனை செய்பவர்களை தூக்கிப் பிடிப்பதும், வழக்கமாக கொண்டு இருக்கின்றது. அவர்களை அடையாளம் கண்டு, வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்பதே, ஒவ்வொரு ஹிந்து வாக்காளர்களின் கடமையாக இருக்க வேண்டும் என, இந்து மதம் நல விரும்பிகள் எதிர் பார்க்கின்றனர்.
“தேசம் காக்க, தெய்வீகம் காக்க…
ஒன்று படுவோம், வெற்றி அடைவோம்”…
– அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
Cogent article to enlighten the youngsters of present generations.
Who are hindus, is there any guidelines
Hinduism is living method in India.
Sanadhana dharmam.
That means all are getting all resources.
It is not a religion.
Christian and Muslim are religion.
They are from abroad.
Hindus are indians.indians are Hindus
You are hindu, your father and mother is hindu, your grandmother and grandfather is hindu. If you are not hindu,you are from abroad
Very good and honest article.
இருந்த அடிமைத்தனம் ஒழிக்க எல்லா மக்களும் சமம் என்பதை நிலை நிறுத்தி மக்கள் சுயமரியாதை யுடன் வாழ வந்தேரிகள் கொண்டு வந்த சமயநுல்களை அதில் இருந்த தவறுகளை எடுத்து கூறினார் பெரியார். இவர்கள் மட்டும் அன்று செயல்படவில்லை என்றால் இன்று ம் பெரும்பான்மை மக்கள் அடிமைகளாகத்தான் இருந்திருப்பார்கள்.கல்வி மற்றும் சம உரிமை இருக்காது. இந்து என்றால் என்ன அர்த்தம் என்றும் கூறினார். அவர் இந்த தேசத்தின் இந்து என்று அழைக்கப்படும் குடும்பமத்திலிருந்து தான் வந்தார்.எதிர்த்து தங்கள் கருத்துக்களை சொல்ல நாதியில்லை.இன்று அவர்கள் இல்லை. எனவே ஆடுகின்றனர்
ஆம் காம பசிக்கு பெற்ற தாயுடன் படு என்றவன்
சைவ சமயம், வைணவ சமயம் என இரு பெரும் சமயங்களைச் சார்ந்த இறைவழிபாடு தான் இருந்தது. அவரவர் விருப்பத்திற்கேற்ற கடவுளை கும்பிட்டு வந்தனர். ஆராதனைகள் தமிழிலேயே செய்யப்பட்டது. கடவுளை அருகாமையில் கண்டு அளவளாவிய நிகழ்வுகள் நடந்தன. இன்றும் காட்சி தந்து அளவுளாவுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்படி இருக்க இடையில் சமஸ்கிருதத்தை நுழைத்துக் கொண்டு இந்து மதம் என்றும், அதை நாங்கள் தான் காப்பாத்த இருக்கிறோம் என பிழைக்க வந்தவன் கூறுகிறான்.
உழைத்து வாழாமல் அடுத்தவர்களை ஏய்த்து பிழைக்கும் கூட்டத்தின் கூச்சல்..
மு சுகுமாரன், எம் இ.,
சங்கிகளின் விளம்பரம்