இந்து தாய் கோரிக்கை

இந்து தாய் கோரிக்கை

Share it if you like it

பல கோடிக்கும் மேற்பட்ட இந்து தாய் கோரிக்கை

என் சுதந்திரத்தையும், என் குழந்தைகளின் பறிக்கப் பட்ட, பறிக்கப் படுகின்ற உரிமைகளையும், நிலை நாட்ட நீதி கோரி, நியாயம் கேட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக சமூகங்களின் நீதி மன்றத்தின் முன் நான் நிற்கின்றேன்.

என்னுடைய குழந்தைகளாக இருப்பதால், என் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற அநீதிகளை பட்டியலிட, நான் இங்கு வந்து உள்ளேன். ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைகளை பிரிக்கப் படும், கடும் துயரத்தை, நீங்கள் உணர்கிறீர்களா? தன் கண்ணுக்கு முன், தன் குழந்தைகளின் பிரிவையும், ரத்தத்தையும் பார்க்கும் தாயின் கதறல், உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

என் குழந்தைகளின் அழுகை, உங்கள் மனதை, உருக்கவில்லையா? மனித உரிமை, இந்த உலகத்தில் பிறக்கும், ஒவ்வொருத்தருக்கும் கிடைக்க வேண்டிய பொது உரிமை என்றால், என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய உரிமை அல்லவா அது?

என் குழந்தைகள், தங்கள் தாயிடம், பாசமாக, அர்ப்பணிப்புடன் இருப்பதாலும், என் வார்த்தைக்குக்  கீழ்ப் படிவதாலும், கயவர்களால் தாக்கப் படுகிறார்கள். மனிதாபிமான ரீதியிலும் இரக்கமான சுபாவத்தினாலும், ஆக்ரமிப்பாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால், அந்த ஆக்கிரமிப்பாளர்கள், தஞ்சம் புகுந்த வீட்டில், நிரந்தரமாக வசிக்கும் அனுமதியும், பெற்றார்கள். அவற்றில் சிலர், என் குழந்தைகளை அடக்கி, மதம் மாற்றி, இந்திய நிலத்தை அவர்களிடம் இருந்து பறித்து, இந்திய நாடென்ற வீட்டின் உரிமையாளராக  முயல்கிறார்கள். இதற்கு, சில அயல் நாடுகளும், வெளி நாடுகளும் ஆர்வம் காட்டி, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உதவி வருகிறார்கள். என் குழந்தைகள், தங்கள் சொந்த வீட்டில், ஒடுக்கப் படுவதை, என்னால் பார்க்க இயலாது.  நான், நியாயம் கேட்டு, வந்து உள்ளேன்.

தேசத்தின் பண்டைய ஒருமைப் பாட்டையும், பெருமையையும் சிதைக்காமல், வேற்று மதத்தினராக இருந்தாலும், விசுவாசமான குடி மக்களாக, அமைதியுடனும், ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால், எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால், நயவஞ்சகர்களின் தாக்கத்தால் பொது சொத்துக்களுக்கு பெரும் சேதம், ஒருமைப் பாட்டின் சீரழிவு மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. என் குழந்தைகள் அனுபவித்த துயரங்களை கேளுங்கள்…

ஒரு கையில் எப்படி ஐந்து விரல்களும், ஒரே மாதிரி இருப்பதில்லையோ? அதே போன்று என் குழந்தைகளும் ஒரே மாதிரி குணங்களோடு இல்லாததால், அவர் திறமைக்கு ஏற்ப, பக்குவத்திற்கு ஏற்ப, அவரவர்க்கு பொறுப்பை கொடுத்தேன். இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

சொத்து மற்றும் விலை மதிப்பற்ற, இலக்கிய ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பை, எனது சில பொறுப்பான, மகன்களிடம் ஒப்படைத்தேன். அவர்கள், தன் பொறுப்பை, சிறப்பாக நிறைவேற்றுவதாலும், ஏமாற்றுக்காரர்களின் சூழ்ச்சியில் விழாமல், இந்த தேசத்தையும், மக்களையும், என்னையும் பாதுகாத்து, தன் கடமையை செய்வதாலும், சூழ்ச்சிக்காரர்கள் அவர்களை, தன் வழியிலிருந்து, விளக்க முயற்சிக்கிறார்கள். ஏன்? இந்த குழந்தைகள் அவமதிக்கப் படுகிறார்கள், கொல்லப் படுகிறார்கள், தாக்கப் படுகிறார்கள், விரட்டப் படுகிறார்கள் என்று யாரவது கேள்வி கேட்டீர்களா?

காஷ்மீர் பண்டிதர்களுக்கு, “மரணம், தப்பித்து ஓடுவது, இஸ்லாமியத்துக்கு மதம் மாறுவது” என்ற மூன்று தேர்வுகளை, தீவிரவாதிகள், வைத்திருந்த போது மனித உரிமை அமைப்புகள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? காஷ்மீர் பண்டிதர்கள் கொடூரமாக கொல்லப் பட்டனர், இரக்கமின்றி தாக்கப் பட்டனர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். எங்கே இருந்தது, உலகத்தின் மனித உரிமை குரல்கள்?

பயங்கரவாத அமைப்புகளால் நடத்தப் பட்ட, 1998 ன் சம்பா படுகொலை, வந்தமா படுகொலை, சாப்னரி படுகொலை, பிரான்கோட் படுகொலை, 2000, 2001 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடந்த அமர்நாத் யாத்திரை படு கொலைகள், கிஷ்த்வார் படுகொலை (2001) நடந்த போது, உலகக் குரல்கள், எங்கே இருந்தது? உலகமே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது அல்லவா?

சமீபத்தில், நவம்பர் 2020 ன்  தொடக்கத்தில், பங்களாதேஷில், இந்து மாணவர்கள் இறை பழி, நிந்தனை செய்வதாக பொய்யான குற்றம் சாற்றி துன்புறுத்தப் பட்டனர். அங்கிருந்த இந்துக்கள் தாக்கபட்டு, நாட்டை விட்டே, விரட்ட பட்டு, இருக்கிறார்கள். பாகிஸ்தானில், இந்துக்களை ‘காபிர்’ என்று கருதி, சிறுபான்மை இந்துக்களின், உரிமைகள் பறிக்கபடுகிறது. 2020 செப்டம்பர் மாதத்தில், பதினாலு வயதான இந்து பெண்ணை அபகரித்து, கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்த, அந்த சிந்து வாசியை யாரும் கண்டிக்கவில்லை.

வேலை வாய்ப்புக்கு மதம் மாற்றம், வசிப்பதற்கு மதம் மாற்றம் என்று பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, தன் அடையாளத்தை மாற்றி, அஸ்திவாரத்தையே இழந்து, நிர்கதியாக நிற்கின்றார்கள், பாகிஸ்தானில் வசிக்கும் என் இந்து குழந்தைகள். தட்டி கேட்கும் உலக குரல்கள் எங்கே?

கேரளாவில் எட்டு இந்துக்கள் கொல்லப் பட்ட போது, மராத் படுகொலையை இன வாதமாக பார்க்க உலகம் மறுத்தது, ஆனால் காஷ்மீரில், முன் எச்சரிக்கை  நடவடிக்கையாக, சட்ட ஒழுங்கை காப்பதற்கு இணைய அலைவரிசையை துண்டித்தற்கு, நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்கள். உலகத்தால், இணையத்திற்கு கொடுக்கப் பட்ட மதிப்பு, இந்து உயிர்களுக்கு வழங்கப் படவில்லை என்ற உண்மையை அறிந்துக் கொள்வோம்!

அயல் வீட்டு காரர்களால், ஒரு பக்கம் மதவாத தாக்குதல், இன்னொரு பக்கம் நில அபகரிப்பு ஏற்படுகையில், மற்றொரு பக்கம், மத மாற்றம் மற்றும் நாத்திக வாதம் பரவி வருகிறது. என்னை மய்யமாக்கி, என்னால் தான், என் குழந்தைகளில் சிலர் ஏழையாகவும், தீண்டத்தகாதவராகவும் ஒதுக்கப் படுகிறார்கள் என்று பொய்யை சொல்லி, நம்ப வைத்து, எனக்கு எதிராக தூண்டி விட்டு, என் பிள்ளைகளை, என்னை விட்டு விலக்கி, பிரித்து, தன் சகோதர சகோதரிகளுக்கு எதிரே திருப்பி, மதம் மாற்றி விடுகிறார்கள். இந்த கொடுமையை யாரிடம் சொல்வேன்?

“கம்யூனிசம்” என்ற பெயரில், “பகுத்தறிவு” என்ற பெயரில், “நாத்திகம்” என்ற பெயரில், 2018 ல் மார்ச் மாதத்தில், திருவல்லிக்கேணி மற்றும் மைலாப்பூரில் பார்ப்பனர்களின் பூணலை வெட்டிய சம்பவங்கள் என் உணர்வை கீறியது.

இந்த வருடம் மட்டும், 11 சாதுக்களை கொடூரமாக கொன்று இருக்கிறார்கள். இந்த துறவிகள் யாருக்கு என்ன தீங்கு செய்திருக்க முடியும்? மஹாராஷ்ட்ராவின் பாலகர் என்ற இடத்தில், 2 இந்து சாதுக்களை மிருகத்தனமாக தாக்கி, 9 சிறுவர்கள் உட்பட 110 பேர் அடிச்சே கொன்றார்களே? அப்படி என்ன இந்துக்களுக்கு எதிரான வெறி இவர்களுக்கு? மாறாக, இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து குரல் எழுப்பினால், இந்துக்களின் நடவடிக்கை மதவாத செயல் என்று பழியை, அவர்கள் மேலேயே திருப்பி விடுவார்கள். இதை உலகம் மெளனமாக உள் நாட்டு பிரச்சனை என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும்.

கம்யூனிசம், இந்து எதிர்ப்பு பிரச்சாரம், இந்துக்களை கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிற்கு மதம் மாற்றுவது போன்றவை, எனது குழந்தைகளிடையே உள்ள ஒருமைப் பாட்டை உடைக்கும்  திட்டமாகும். ஒற்றுமை சிதைந்தால், அவற்றின் வலிமை பலவீனமாகும். வஞ்சககாரர்களின் சதி படி, சொத்து மற்றும் செல்வங்கள் அனைத்தையும் பலவீனமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வது எளிது.

எனது பிள்ளைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிமைத் தனமாக சேவை செய்வதையோ, தங்கள் சொந்த நிலத்தில் மூன்றாவது குடி மக்களாக வசிப்பதையோ, அல்லது பிற நாடுகளில் வீடற்று அடைக்கலம் தேடி அலைந்து திரிவதையோ நான் பார்க்க விரும்பவில்லை.

இந்துக்களுக்கான நிலம் எங்கே? இந்த உலகத்தில், இந்துக்களுக்கான நாடு எங்கே இருக்கிறது? என் நாடு இந்து ராஷ்டிரம் என்று சொன்னால், நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பீர்களா? இந்தியா, இந்துக்களின் நாடு என்று ஒருவர் சொன்னால், அது மதம் சார்பற்ற நாடு என்று நிராகரிக்கப் படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி அளித்தால், அது இந்து உடல் பயிற்சி முறை என்று வேற்று மதத்தினர் புறக்கணிக்கிறார்கள். பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்குவதற்கு, ராஜஸ்தானில் நடந்ததைப் போல, மதச் சார்பின்மை என்ற பெயரில் இந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு காரணத்தினால், பள்ளிகளில் யோகா கற்பித்தல், கட்டாயமற்றதாக ஆக்கப் பட்டது. இந்த வாய்ப்பின்மை நம் இந்து தலை முறையினருக்கு நேரும் அநீதி அல்லவா? மதச் சார்பின்மை என்ற பெயரில், தங்கள் சொந்த பாரம்பரிய வளத்தை, சமரசம் செய்ய, எந்த உலக நீதி சொல்லுகிறது?

இந்து பள்ளி மாணவர்கள், மத சின்னமாகிய விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் போட்டு, திலகம், பட்டை, நாமம், தங்கள் நெற்றியில் பூசிக் கொண்டால் துவேஷிக்க படுகிறார்கள். குடுமியை வெட்டனும் என்கிறார்கள். சமஸ்க்ருதம் செத்து போன மொழி என்று புதைக்க முயல்கிறார்கள். இந்து கடவுள்களை, இழிவாக பேசுகிறார்கள். கோவில் சிற்பங்களை  ஆபாச கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்.

எழுத்தை துவங்குவதற்கு முன், பிள்ளையார் சுழியை போடுவது, இந்து தமிழரின் வழக்கமாகும். பரீட்சை தாளின் இத்தகைய சின்னம், ஒரு அடையாள குறியீடு என்று, பிள்ளையார் சுழி போடுவதை, பல பள்ளிகள் தடுத்து, பிள்ளையார் சுழி போடும், அந்த பழக்கத்தை முடக்கி விட்டார்கள். உணர்ந்தோமா?

இந்தியாவுக்குள் ‘மினி பாகிஸ்தான்’ என்று சொன்னால், எந்த பகுதி உங்கள் நினைவுக்கு வரும்? ஆம். காஷ்மீரையும் ஹைத்ராபாத்தையும் சொல்வது இயல்பான ஒரு விஷயம். ஹரியானா மாநிலத்தில் உள்ள “மேவாட்” என்ற பகுதியை பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா? இல்லை என்றால் சொல்கிறேன். மேவாட்டில், இஸ்லாமியர்களால், குறிப்பாக தலித் சிறுமிகளை, பாலியல் பலாத்காரம் செய்தல், மணப் பெண்களைக் கடத்தி, கட்டாயமாக மதம் மாற்றுவது, தலித்துகள் மீதான தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களின் செய்திகள் சமீபத்தில், ஜூன் 2020 ல் வெளி வந்தது. அங்கே, இந்து சடங்குகளைப் பின்பற்றுவதை எதிர்த்து பைசலும், பர்வீனும் இந்து இளைஞர்களை எச்சரித்து, இந்து இளைஞர் முரளிலால் சைனியை, ‘உங்களைச் சுட்டு விடுவோம், நீங்கள், மேவாட்டில் வாழ விரும்பினால், எங்களை வணங்குங்கள்’ என்று மிரட்டிய போது, மதசார்பின்மை யாருடைய நினைவுக்கும் வர வில்லையே?

2019 குடிமக்கள் திருத்தச் சட்டத்தை கண்டிக்க, இந்திய அரசியல் அமைப்பில் இருந்து, மதச் சார்பின்மையை மேற்கோள்ள, இஸ்லாமியர்களுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் காட்டிய உற்சாகம், மேவாட்டில் அதே அரசியல் அமைப்பின் 25-வது ஆர்டிகிளை மேற் கொள்ள, இந்துக்களுக்காக, எந்த விதமான ஆர்வத்தையும் காட்டவில்லையே?

புல்வாமாவில் ராணுவ வீரர்களை தாக்கிய தீவிரவாதிகளை எதுவும் சொல்லாமல்,  தற்காப்பு முறையில் பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியை இந்தியா தாக்கியதை விமர்சிப்பவர்கள் யார்?

பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது. இந்துக்கள் மீதான அநீதிகளை அகற்ற, நேரம் வந்து விட்டது. பாரத நாட்டின், அஸ்திவாரமாக இந்து மதத்தை, எந்த மதச் சார்பின்மையாலும் உடைக்க முடியாத வகையில், இந்துக்களுக்கான உரிமை நாடாக, ‘இந்துஸ்தான்” வர வேண்டும். இந்தியா, பாகிஸ்தானாக மாறி விடக் கூடாது. “சனாதன தர்மம்” என்ற, என் இந்து வம்சத்தின் பாதுகாப்பிற்கும், நலத்திற்கும், கண்ணீர் விடும் ஒரு தாயின் கோரிக்கையாகும்.!

 

Dr.M.Vijaya, Member, All India Council of Human Rights, Liberties and Social Justice – a Member and Authorised  Signatory  of  United Nations Global Compact.

 


Share it if you like it