பிரதமர் மோடியின் பூடான் விஜயம்  !

பிரதமர் மோடியின் பூடான் விஜயம் !

Share it if you like it

பிரதமர் மோடிஜியின் பூடான் விஜயம்:

தன் பக்கத்து நாடுகளில் எல்லைகள் எல்லாம் தன்னுடையது என சொந்தம் கொண்டாடும் சீனா, எத்தனை முறைகள் அவமானப்பட்டாலும் அதை கருத்தில் கொள்ளாமல், நம் அருணாச்சலப்பிரதேசத்தை தன்னுடையது என வரைபடங்களில் குறித்து கொண்டாடும் சைனா, தன் வழக்கமான வேலையாக தன் அண்டை நாடான பூடானிலும் நான்கு இடங்கள் தன்னுடையது என சொந்தம் கொண்டாடி அதற்கு போலி ஆதாரங்களை காட்டி தன் குடிமக்களை தந்திரமாக குடியேற்ற வைக்க முயல்கிறது. ஏற்கனவே பூடானின் எல்லை பகுதியில் 18 பேர்களை குடியமர்த்தியுள்ளது.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் 2017 போல் மறுபடியும் டோக்ளாமில் சீனாவின் அத்துமீறல் ஏற்பட்டால் அதன் பாதிப்பு வடகிழக்கு மாநிலங்களை மேற்கு வங்காளத்தோடு இணைக்கும் சிலிகுரி காரிடரில் ஏதாவது பிரச்சினை வருமோ என்பதே நம் கவலை.

பூடான் பிரதமர் ஷெரீன் தோகே சென்ற வாரம் இந்தியா வந்து ஐந்து நாட்கள் தங்கி நம் பிரதமரோடு இது சம்பந்தமாக நீண்ட நெடிய பல பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அப்போது இந்தியாவை தங்களது மூத்த சகோதரர் என குறிப்பிட்டார். சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு சென்ற நிலையில், அவருடைய மனக்கவலையை போக்க நம் பாரத பிரதமர் திரு. மோடிஜி நம் நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்லும் முதல் பிரதமர் என்ற சரித்திரத்தை உருவாக்கி அங்கு சென்றுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு சென்ற நம் பாரத பிரதமரை விருந்தோம்பலுக்கு புகழ் பெற்ற பூடான் சிறப்பாக வரவேற்று, பூடான் மன்னர் திரு. ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், அவர்களின் மிக உயரிய விருதான Order of the Druk Gulapo வழங்கி கௌரவித்தார்.

பூடானுக்கு இந்தியாவுக்கும் ஆன நட்பு ஆரம்ப கால 1960 ஆரம்பித்து தற்போது வரை சிறப்பாக உள்ளது. அவர்களின் 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் பகுதியான 600 திட்டங்களுக்காக 5000 கோடி ரூபாய்கள்(73%) வெளிநாட்டு முதலீடுகள் நம் பாரதம் மூலமாக கிடைத்துள்ளது.

13ஆவது ஐந்தாண்டு திட்டங்களுக்கும் பாரதம் தன் ஆதரவை தரும் என்றும் உறுதியளித்துள்ளது. அவர்களும் நான்கு நீர் சக்தி திட்டங்களை செய்து தர உறுதி அளித்த நிலையில், ஏற்கனவே இரண்டு திட்டங்கள் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் வெளிநாட்டு முதலீடுகளில் நம் பாரதத்தின் பங்கு 50% அளவில் உள்ளது மற்றும் வான்வெளி ஆராய்ச்சி, e-learning, நிதிதொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் நம் தேசம் ஒத்துழைத்து முன்னேற்ற உள்ளது.

அவர்களின் வான்வழி, நில வழி பாதைகள் அமைக்கவும் பாரதம் உதவி வருகிறது. அவர்களின் மன்னரின் கனவுத்திட்டமான தன்னிரைவு பெற்ற நகரத்துக்கும் உதவி வருகிறது. இது தவிர விவசாயம், திறன் மேம்பாடு, கலாச்சார பாதுகாப்புக்கும் உதவி வருகிறது.

நம் பிம்(BHIM) பணபரிவர்த்தனைகளை பூடான் இரண்டாவது அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

தற்போது பூடானின் மிக முக்கியமான தேவை வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழித்து முன்னேற்றம் காண்பது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் ஏற்கனவே 2013-18 ஆண்டு பதவில் இருந்த போது சிறப்பாக செயல்பட்டதால் மறுபடியும் அவரை மக்கள் இந்த முறை தேர்ந்தெடுத்துள்ளனர்

இரு நாடுகளும் தங்களது நட்புறவை மேலும் மேப்படுத்த எல்லை தாண்டி இருநாடுகளையும் இணைக்க மேற்கு வங்கத்தில் இருந்து பூடானின் சம்ஸ்ஸே நகருக்கும், அஸ்ஸாமில் இருந்து பூடானின் கெலுப்ட்டு நகருக்கும் ரயில் பாதைகள் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

கெலுப்ட்டுவை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்து அங்கு செல்ல தரை வழி செல்ல சிறப்பான பாதைகள், வான்வழியாக சென்றடைய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை பாரதம் கையில் எடுக்கும். இது சீனர்களின் ஆதிக்கத்தை வலுவாக தடுக்கும்.

_-Articles by சுபா பாலாஜி


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *