பா.ஜ.க வின் மீது எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி, பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி என்று விமர்சனங்களை கூறி வரும் நிலையில். மற்ற கட்சிகளை விட பா.ஜ.க அனைத்து சமூக மக்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கி வருகிறோம் என்று அதன் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இன்று அதனை மெய்ப்பிக்கும் விதமாக பட்டியலின சமூகத்தை சார்ந்த எல்.முருகன் அவர்களை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழக தலைவராக நியமித்துள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அக்கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து இந்து பறையர் பேரவை (HPP) தமிழக பாஜக தலைவராக பட்டியலினத்தை சார்ந்த எல். முருகன் அவர்களை நியமனம் செய்து சமூக நீதி காக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆதரவு அளித்த இந்து சகோதரர்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை கூறியுள்ளனர்.