அன்று ஆரோகியமாகவும் , நிம்மதியாகவும், வாழ்ந்து வந்தனர் நம்முன்னோர்கள் ஆனால் இன்று ஒவ்வொருர் மனதிலும் எங்கே நிம்மதி என்ற பாடல் வரிகளே ஒடிக்கொண்டு இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
இதில் இருந்தே நம் வாழ்க்கை சூழ்நிலை எப்படி மாறிவிட்டது என்பதனை நன்கு உணர முடியும். இந்நிலையில் ஓமந்தூர் பல்நோக்கு அரசு மருத்துமனையில் நரம்பியல் துறை தலைவர் ஆர்.எம்.பூபதி உலக வலிப்பு நோய் விழிப்புணர்வு தின விழாவினை முன்னிட்டு திங்கள் அன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
இரவு நேர பணிக்காக நாம் இயற்கைக்கு மாறாக அதிகம் நம் உடலை துன்பப்படுத்துகிறோம். இதனால் மனஅழுத்தம், தூக்கமின்மை, மலட்டுத்தன்மை, உடல் பருமன், வலிப்பு நோய், முடி உதிர்தல், உடல் உஷ்ணம் என அனைத்து நோய்க்கும் வாசல் திறந்து விட்டு இருக்கிறது இரவு பணி என்று கூறியுள்ளார்.
மேலும் தலையில் காயம் ஏற்படுவது, புகையிலை கசக்குவது, புகை பிடிப்பது, மூளைக்கு ரத்தம் ஓட்டம் குறைவது, மூளை சிதைவு ஏற்படுவது போன்றவை வலிப்பு நோய் ஏற்பட முக்கிய காரணமாகும்.
இன்று பெரும்பாலானவர்களுக்கு வலிப்பு நோய்க்கு மருத்துவம் பார்ப்பது எப்படி என்றே தெரியவில்லை. இதனால் சிலருக்கு சரியான நேரத்தில் முதலுதவி அளிக்கமுடியவில்லை என்பது வருத்திற்குரிய விஷயம். இருந்தாலும் நாம்
வலிப்பு நோயை எளிதில் குணப்படுத்த முடியும். மேலும் இந்நோயை நாம் எப்படி குணப்படுதலாம் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதில் நாங்கள் திறம்பட செயல்படுகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.