Share it if you like it
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா – சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
அடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு கவர்னர் கேட்டுக் கொண்டார்.
ஆனால், இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் அஜித் பவார் கூறி உள்ளார். இந்நிலையில் பாஜக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடுகிறது.
ஒருவேளை சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லை எனில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படவாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it