விருப்பு, வெறுப்பு, இன்றி மக்களுக்கு சேவை செய்வதையே அரசுகள் நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். பல்வேறு ஹிந்து அமைப்புகள் ஜமாத்திற்கு அரிசி வழங்குவது போன்று எங்களுக்கும் சில சலுகைகளை வழங்க வேண்டும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இரு திராவிட அரசுகளும் வாக்கு வங்கியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது.
இந்து, கிறிஸ்தவ, புத்தம், மற்றும் சீக்கிய மக்கள் தங்களுக்கும் இதுபோல் சலுகைகள் வேண்டும் என்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டமோ அல்லது நீதிமன்றங்களை நாடும் சூழ்நிலை ஏற்பட்டால் தமிழக அரசின் நிலை என்னவாகும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் "நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவிற்கு அரசு சார்பில் 20 கிலோ விலையில்லா சந்தனக்கட்டைகள்" வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம் வழங்கினேன். pic.twitter.com/Nb8CGDCKjg
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 31, 2020
கோயில காசு எடுத்து மசூதிக்கு சந்தண கட்டை? கோயிலில் இருந்து காசு எடுக்காதே இந்துக்கள் சொத்து இந்துக்களுக்கே இந்து கோயில் காசு அரசாங்கத்திடம் மசூதி காசு இஸ்லாமியர்களிடமா? இது சரியா இது தான் மதச்சாற்பின்மையா?
— பாண்டிய நாட்டு Sambathiyer (@sambathiyer) July 31, 2020