ஈ.வெ.ரா எனது குரு என்று எப்பொழுது வ.உ.சி கூறினார்? ஏன் இந்த பித்தலாட்டம் வீரமணிக்கு பா.ஜ.க மூத்த தலைவர் கேள்வி?  

ஈ.வெ.ரா எனது குரு என்று எப்பொழுது வ.உ.சி கூறினார்? ஏன் இந்த பித்தலாட்டம் வீரமணிக்கு பா.ஜ.க மூத்த தலைவர் கேள்வி?  

Share it if you like it

வழக்கறிஞர், சுதந்திரப் போராளி, கடல் வர்த்தகத்தில் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தை உடைத்து, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடியவரும் சுதேசிய இயக்கத்தை தமிழில் நாட்டில் மிக தீவிரமாக ஆதரித்தவர் நமது “கப்பலோட்டிய தமிழன்” என்பதில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பாரத தேசத்திற்காக வ.உ.சி. அனுபவித்த கொடுமைகள், கஷ்டங்களை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது என்பது நிதர்சனம். சிறைச் சாலையில், அவர் சாதாரண தண்டனை கைதி போன்று அல்லாமல், மிக கொடூரமாக நடத்தப் பட்டார். காளைகள் இழுக்க வேண்டிய செக்கை, வ.உ.சி.யை மதிய நேரத்து உச்சி வெயிலில் இழுக்க வைத்து உட்பட பல துயரங்களை இந்திய விடுதலைக்காக  தாங்கி கொண்டார் வ.உ.சி.

அப்படிப்பட்ட விடுதலை வீரர் வ.உ.சி அவர்கள் ஈ.வெ.ரா-வை தனது குருவாக ஏற்றுக் கொண்டார் என்று துளியும் வாய் கூசால் மிகப் பெரிய கப்சா கதையை அளந்து விட்டு உள்ளார் தி.க தலைவர் வீரமணி. இந்தியாவிற்கு சுதந்திரம் தரக்கூடாது என்று கூறியவர், வெள்ளையார்கள் இந்தியாவை விட்டு போக கூடாது என்று வலியுறுத்திய ஈ.வெ.ரா-வை எப்படி வ.உ.சி அவர்கள் குருவாக ஏற்று கொண்டு இருக்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில்.

பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் வீரமணிக்கு ஆதாரத்தோடு தக்க பதிலடியை தனது டுவிட்டர் பக்கத்தில் கொடுத்து உள்ளார்.

வ உ சி 1936 லேயே மறைந்துவிட்டார். ஈவேரா நீதிக்கட்சி தலைவர் ஆனதே 1939-ல் தான். வ உ சி 1906-ல் சுதேசி கப்பல் விடும்போதெல்லாம், ஈவேரா ஒரு ஆளே கிடையாது. அப்போது ஈவேரா காசி சென்று, அங்கு சுற்றிக்கொண்டு இருந்தார். ஏன் இந்த பித்தலாட்டம் ? என்று குறிப்பிட்டு உள்ளார். 

 


Share it if you like it