இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கை ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு :
நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான் அவர்களுக்கு வணக்கம்.
நான் நலம் அதுபோல் நீங்களும் நலமாக இருக்க செந்தில் ஆண்டவன் அருள் புரிவார்.
கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் பிரிவினைவாத அரசியலை கைவிட்டு , மத உணர்வை புறந்தள்ளி, துளியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள்.
அவ்வாறு மத உணர்வு உள்ளவர்கள்தான் சிகிச்சைக்கு வர மறுக்கிறார்கள்.
அந்தத் தலைவர்களிடம் நீங்கள் பேசி மேலும் இந்த கொடிய நோய் பரவாமல் இருக்க, தடுக்க முயற்சி செய்யலாம் அல்லவா??
ஒரு இஸ்லாமியர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உறவினர் மற்றும் பலபேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் மதச்சார்பின்மை பேசும் நல்லவர்கள், மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நீங்கள் ஏன் இந்த முயற்சி எடுக்க கூடாது??
தனிமையில் இருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல உலக மருத்துவர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். இதை ஏன் அவர்கள் மறுக்கிறார்கள்.
ஒரு பதிவு எனக்கு வந்தது அதில் ஒரு இஸ்லாமிய டாக்டர் அந்த நோய் எப்படி கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவாக சொல்லி இருந்தார். அந்த பதிவை நான் பலருக்கும் பகிர்ந்துள்ளேன். அவர் பெயர் டாக்டர் பீர்மைதீன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பனிபுறிந்தவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரும் நாட்டில் உள்ளனர் .
மதம் என்று நாங்கள் பார்க்கவில்லை நீங்கள்தான் பார்க்கின்றீர்கள். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களை ஓட்டுக்காக பிரிக்கின்றனர். இந்த பிரிவினை வருங்கால இந்தியாவுக்கு நல்லதல்ல.
இன்று எங்கள் ஊரில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்! எங்கள் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் காயல்பட்டினத்தில் துப்புரவு பணிக்கு செல்கிறார்கள் அவர்களை திமுக பிரமுகர்கள் அங்கு போகக் கூடாது என்று தடுத்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து வந்த வாகனத்தை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.
இதற்கு காரணம் யார்? காயல்பட்டினத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பஷீர்.
டெல்லியில் நடைபெற்ற இசுலாமிய மத மாநாட்டிற்கு சென்றுள்ளார் அவருக்கு கொடிய நோய் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
ஆண்டவன் அருளால் அவருக்கு நோய் வரக்கூடாது… ஆனால் அந்த டாக்டர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி இருக்க வேண்டுமல்லவா? மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இஸ்லாமிய மத தலைவர்களிடம் உங்கள் வாதத்தை ஆணித்தரமாக வைத்து அவர்களை சுயபரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள். அது தான் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்லது.
நன்றி வணக்கம்
பாரத் மாதா கீ ஜெய்!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.