இஸ்லாமிய ஜமாதிகளை கண்டுபிடித்து  தனிமைப்படுத்திய காவல்துறை குழுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் !

இஸ்லாமிய ஜமாதிகளை கண்டுபிடித்து தனிமைப்படுத்திய காவல்துறை குழுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் !

Share it if you like it

  • உத்தரப்பிரேதேச மாநிலம் மொராதாபாத்தில் நடந்த ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவர்கள் ராம்பூர் சென்று பின்னர் ருத்ராபூர் நோக்கி பயணித்துள்ளனர். ருத்ராபூர் வந்த அந்த 13 ஜமாதிகளை கண்டுபிடித்து அவர்களை வெளியில் செல்லாமல் தடுத்து வைக்கப்பட்டதற்காக காவல்துறை குழுவுக்கு உத்தரகண்ட் காவல்துறை இயக்குநர் ஜெனரல் 20,000 ரூபாய் பரிசு அறிவித்தார்.
  • மேலும் அந்த 13 ஜமாதிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த 13 ஜமாதிகளில் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் வெவ்வேறு ஜமாஅத் பயணங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 292 வெளிநாட்டு ஜமாதிகளையும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த வெளிநாட்டினர் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
  • உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் நாடு முழுவதும் 9000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் 1306 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்தம் 647 கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகள் டெல்லியில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
  • ஜமாத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டினரின் பாஸ்போர்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது. வெளிநாட்டினருக்கு தங்குமிடம் வழங்கிய மக்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Share it if you like it