Share it if you like it
மஹாராஷ்ட்ரா அரசியலில் நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்து வருகின்றது. சிவசேனா முதல்வர் பதவி கேட்டு பா.ஜ.க கூட்டணியை விட்டு வந்த பின்னர் பா.ஜ.கவினால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. பின்னர் ஆளுநர் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் காங்கிரஸ் பிடிகொடுக்காமல் தாமதபடுத்தியதால் சிவசேனாவால் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களை திரட்ட முடியவில்லை.
யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் மஹாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் சிவசேனாவானது ஆட்சியமைக்க போதிய அவகாசம் தரவில்லை என மஹாராஷ்ட்ரா ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. இவர்களின் சுயலாபத்திற்காக கூட்டணியையே கழட்டி மாற்றும் இவர்களால் ஏமாந்து போவது இவர்களை நம்பி வாக்களித்த சாமான்யனே!
Share it if you like it