சமீபத்தில் பெண் மல்யுத்த வீரரான பாபிதா குமாரி போகத் என்பவர் அவருடைய ட்விட்டர் அக்கௌன்ட்டில் இருந்து சில டுவீட்களை செய்திருந்தார். அதற்காக அவர் பல அச்சுறுத்தும் கீழ்த்தரமான பதிவுகளை பெற்றார். கொரோனா வைரஸைப் பரப்பிய தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் டெல்லியில் மாநாடு நடத்தாமல் இருந்திருந்தால், நாம் அனைவரும் வைரஸிலிருந்து விடுபட்டிருப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த சில கம்யூனிஸ்ட்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ட்விட்டரில் அவரை நாகரீகமின்றி வசை பாட தொடங்கினர். இதனை தொடர்ந்து அவரது ட்விட்டர் கணக்கு சர்ச்சைக்குரிய பதிவு என்று முடக்கப்பட்டது.
பின்னர் மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் செவிலியர்களைத் தாக்கும் நபர்களுக்கு எதிராக அவர் எழுதியதாக மல்யுத்த வீரர் தெளிவுபடுத்தினார். அதன்பின் அவரது ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது.