வாழவைத்த மண்ணை தொட்டு வணங்கி சொந்த மாநிலத்திற்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் !

வாழவைத்த மண்ணை தொட்டு வணங்கி சொந்த மாநிலத்திற்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் !

Share it if you like it

  • உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அகமதாபாத்தில் சிக்கித் தவித்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதியை மத்திய அரசு செய்தது. இந்நிலையில் கிருஷ்ணாவதி தேஷ் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், ஊரடங்கினால் நான் அகமதாபாத்தில் சிக்கிக்கொண்டேன். நான் உத்தரபிரதேசத்தின் ரெய்பரேலியைச் சேர்ந்தவன். நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் தற்போது திரும்புகிறோம். இதற்காக நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் அனைத்து வசதிகளையும் அரசிடமிருந்து பெற்றுள்ளோம். நாங்கள் ஒரு சிறப்பு பஸ் வழியாக ரயில் நிலையத்தை அடைந்தோம். இப்போது ரயிலில் பயணம் செய்கிறோம் என்று கூறினார்.
  • மேலும் தங்களை இத்தனை நாட்களாக உணவிட்டு வாழவைத்த குஜராத் மண்ணை தொட்டு வணங்கி பின்னர் ரயிலில் ஏறினார்.
  •  இந்திய ரயில்வே  இந்தியா முழுவதும் இருந்து 145 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியது. புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பும் இந்த பணியில், 2.10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வியாழக்கிழமை தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு இந்திய ரயில்வே உதவி செய்ததாக ரயில்வே அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.


Share it if you like it