இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு வென்டிலேட்டர்களை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்- டிரம்ப்!

இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு வென்டிலேட்டர்களை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்- டிரம்ப்!

Share it if you like it

அண்மையில் அமெரிக்க அதிபர் கேட்டு கொண்டதற்கு இணங்க மத்திய அரசு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்தது. தக்க சமயத்தில் உதவிய  இந்திய அரசிற்கு  டிரம்ப் நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல். இந்தியாவிற்கு தேவையான உதவிகளை அமெரிக்க அரசு வழங்கும்  என்று வாக்குறுதி அளித்தார்.

இதன் அடிப்படையில் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்

இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு அமெரிக்கா வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம். இந்த தொற்று நோய்களின் போது, தடுப்பூசி ஆய்வு பணிகளின் வளர்ச்சிக்கும் நாங்கள் ஒத்துழைக்கிறோம். ஒன்றாக நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்! என்று டிரம்ப் கூறியுள்ளார்.

https://twitter.com/realDonaldTrump/status/1261368451555360774


Share it if you like it