Share it if you like it
- சென்னையில் லால்ரெம்சங்கா என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை அவசர ஊர்தியில் 3,300 கிலோ மீட்டர்கள் பயணித்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவியிருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள்.
- மிசோரம் மாநிலத்திற்குள் பயணித்தபோது சமூக வலைதளங்கள் மூலம் இந்த சம்பவத்தை அறிந்துகொண்ட மக்கள் பல ஊர்களில் கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றுள்ளனர். 84 மணி நேர பயணத்தில் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள கிராமத்தில் லால்ரெம்சங்காவின் உடலை ஒப்படைத்தனர்.
- லால்ரெம்சங்கா சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார். ஜெயேந்திரன், சின்னத்தம்பியின் சேவைக்கு மிசோரம் மக்களின் பாரம்பரிய உடையை அளித்து அம்மக்கள் நன்றி பாராட்டியுள்ளனர். இருவருக்கும் பணமும், அன்பளிப்பும் அளித்து பாராட்டிய மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா, இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.
Share it if you like it