ஊரடங்கு உத்தரவை மீறி கடை திறப்பு, கேள்வி கேட்ட அதிகாரிகளை துரத்தி துரத்தி அடித்த பொதுமக்கள்- காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த போலீசார் !

ஊரடங்கு உத்தரவை மீறி கடை திறப்பு, கேள்வி கேட்ட அதிகாரிகளை துரத்தி துரத்தி அடித்த பொதுமக்கள்- காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த போலீசார் !

Share it if you like it

  • ஏப்ரல் 28 அன்று மேற்கு வங்கத்தின் , ஹவுரா என்ற நகரில் உள்ள பெலியஸ் சாலையில் சில கடைகள் ஊரடங்கு உத்தரவை மீறி முன்பு போலவே அன்றாட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு இந்த பகுதியானது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் சிவப்பு நிற பகுதியாக அறிவித்துள்ளது. அதனால் இந்த கடைகளை மூட உத்தரவிட உள்ளூர் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் இறுதியில் அது காவல்துறையினருக்கும் கோபமடைந்த கும்பலுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது. பின்னர் காவல் துறையினரை உள்ளூர் இளைஞர்கள் ஓட ஓட அடித்து விரட்டியுள்ளனர்.
  • மிரண்டுபோன காவல் துறையினர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கேயும் சென்று காவல் நிலையத்தின்மீது கற்கள் மற்றும் மட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  • மேலும் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில உயர்நிலை காவல் துறை உறுதியளித்தது.
  • மேற்கு வங்கத்தில் ஊரடங்கின் பொது பல இடங்களில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் முதல்வரான மம்தா பானர்ஜி யாரு எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று ஹாயாக இருக்கிறார்.

Share it if you like it