சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் நன்னாளில் அவரின் கனவை நனவாக்கியுள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த படேல் சுதந்திர இந்தியாவுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்தார். ஆனால் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாக உறுதியேற்ற நேரு காஷ்மீருக்கு என்று தனியே சட்டம் விதி 370 ஐ உருவாக்கினார். இதனால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தும் இணையாமலே இருந்தது. இதனை ஆரம்பம் முதலே படேல் எதிர்த்தே வந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் சிறப்பு சட்டம் விதி 370 ஐ நீக்கியபின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தது. குடியசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டபின் இன்று அதிகாரபூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக இன்று உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்முவும், லடாக் துணைநிலை ஆளுநராக ஆர்.கே மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.