Share it if you like it
கொரோனா தொற்றை, ஒழிக்க விதி விட்ட வழி, என்று வல்லரசு நாடுகள் கதறி கொண்டு இருக்கிறது. கொரோனாவின் கோர முகத்தை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மத்திய, மாநில அரசுகளின், வழிகாட்டுதல் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கொரோனாவினால் உயிர் இழந்தவர்களின் இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக இருப்பது உலகிலேயே மிகக் குறைவு என்றும், இதுவரை நோயிலிருந்து 10,000 க்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it